இங்கிலாந்து இளவரசர் ஹென்றி- மேகன் மார்க்கலுக்கு மே 19-இல் திருமணம்
இங்கிலாந்து இளவரசர் ஹென்றி மற்றும் மேகன் மார்க்கலுக்கு மே 19-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹென்றிக்கும் நடிகை மேகன் மார்க்கலுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அரண்மனை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ்- டயானா தம்பதியின் இளைய மகன் ஹென்றி (33). இவரும் அமெரிக்காவை சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் டிவி நடிகையுமான மேகன் மார்க்கலும் (36) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் கடந்த மாதம் அரண்மனை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் அடுத்த ஆண்டு மே 19-ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று கென்சிங்டன் அரண்மனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இருவருக்கும் அரண்மனையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. மேகன் மார்க்கலுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ராணி மற்றும் சந்திரிங்காம் ராஜபரம்பரையினருடன் இணைந்து பண்டிகையை கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டது.
His Royal Highness Prince Henry of Wales and Ms. Meghan Markle will marry on 19th May 2018.
— Kensington Palace (@KensingtonRoyal) December 15, 2017
Today's announcement follows earlier confirmation of the month of the wedding and its location at St George's Chapel, Windsor Castle. pic.twitter.com/7pgdRM90Na
திருமணத்துக்கு முன்னர் சந்திரிங்காம் அரண்மனைக்கு அழைக்கப்படும் முதல் மணமகள் இவர்தான். ஹென்றியும், மேகனும் இணைந்து செயின்ட் மேரி மேக்டலீனே தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வர்.












Click it and Unblock the Notifications