கேட் மிடில்டனுக்கு 2வது பிரசவம்... இளவரசர் வில்லியமுக்கு 6 வார விடுமுறை!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இரண்டாவது குழந்தையை பிரசவிக்கப் போகும் மனைவியை அருகே இருந்து பார்த்துக் கொள்வதற்காக, இளவரசர் வில்லியம் 6 வார கால விடுமுறை பெற்று அரண்மனைக்கு திரும்பியுள்ளார்.

வெளிநாடுகளில் ஒரு நல்ல பழக்கம் உண்டு. மனைவிக்குப் பிரசவம் என்றால் கணவர்தான் முதலில் லீவு போட்டு கூடவே இருப்பார். பிரசவத்தின்போதும் மனைவிக்கு அருகிலேயே இருந்து அருமை பெருமையாக பார்த்துக் கொள்வார்கள். நம்ம ஊரில் இதெல்லாம் முன்பு அதிகமாக இருக்காது.

குஷி படத்தின்போது விஜயக்குமாரின் மனைவி உள்ளே பிரசவ வலியால் அலறிக் கொண்டிருப்பார். விஜயக்குமாரோ ரூமுக்கு வெளியே மீசையத் தடவிக் கொடுத்தபடி டென்ஷனாக இருப்பார். குழந்தை பிறந்ததும் ஆயா வந்து உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்குய்யா என்று கூறுவார். இப்படித்தான் ரொம்ப காலமாக நம்ம ஊரில் நி்லவரம் உள்ளது. இப்போது இது மெல்ல மாறி வருகிறது.

Prince William gets six weeks paternity leave

அஜீத் தனது மனைவி பிரசவித்தபோது கூடவே இருந்து செல்பியும் எடுத்து வெளியிட்டு அசத்தினார்.

நிற்க... டேக் டைவர்ஷன் டூ லண்டன்..... !

இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம் (32). இவரது மனைவி கேட் மிடில்டன். இத்தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு ஜார்ஜ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டாவது முறையாக கருத்தரித்துள்ள கேட் மிடில்டன், நிறைமாதக் கர்ப்பிணியாக உள்ளார். இம்மாத இறுதிக்குள் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இரண்டாவது என்ன குழந்தை பிறக்கும், ஆணா அல்லது பெண்ணா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு மக்களிடையே உள்ளது.

இந்நிலையில், தனது மனைவியை உடன் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஆறு வார தந்தைகளுக்கான பிரசவ விடுப்பு பெற்றுள்ளார் வில்லியம்.

தற்போது வில்லியம், ஏர் ஆம்புலன்ஸ் பைலட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சமீபத்தில்தான் அதை முடித்தார். இதனால் ஜூன் 1ம் தேதி வரை அவருக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

ஈஸ்ட் ஆங்கிலியன் ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஏர் ஆம்புலன்ஸ் பைலட் ஆக கடந்த மாதம் வில்லியம் சேர்ந்தார். ஏர் ஆம்புலன்ஸ் பைலட் பயிற்சியில் இருந்த வில்லியம், மனைவியின் பிரசவத்தின் போது உடனிருக்க மாட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், முன்கூட்டியே தனது பயிற்சிகளை முடித்து விட்ட வில்லியமிற்கு தற்போது 6 வார விடுமுறை கிடைத்துள்ளது. இந்தாண்டு இறுதியில் அவர் ஏர் ஆம்புலன்ஸ் பைலட்டாக செயல்பட ஆரம்பிப்பார் எனக் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+