அலறுதே அமெரிக்கா.. திடீரென ராணுவ தளத்தில் புகுந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்.. உற்று பார்க்கும் இஸ்ரேல்
அங்காரா: இஸ்ரேல் யுத்தம் தொடரும் நிலையில், பாலஸ்தீன ஆதரவாளர்கள் திடீரென அமெரிக்க ராணுவ தளத்தில் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் தொடர்ந்து வருகிறது.. முதலில் இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அங்கே உள்ளே புகுந்தும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

இதில் இஸ்ரேல் முதலில் திணறினாலும், அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலை ஆரம்பித்தது. வடக்கு காசாவில் இருந்து பொதுமக்களை வெளியேற அறிவுறுத்திய இஸ்ரேல், அங்கே சரமாரி ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது
இஸ்ரேல் விவகாரம்: மேலும், காசா மீது படையெடுக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் காசா மீது இஸ்ரேல் படையெடுக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் செயல்பாடுகளைக் கண்டித்து பல்வேறு நாடுகளிலும் கடும் போராட்டங்களும் நடந்து வருகிறது. அப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன ஆதரவாளர்கள் துருக்கியில் போராட்டத்தை நடத்தினர். அப்போது அங்கிருந்த அமெரிக்க ராணுவ தளத்திற்குள் பாலஸ்தீன ஆதரவாளர்கள் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிராக நடந்த இந்தப் பேரணியில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் விமான தளத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களைத் துருக்கி போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளையும் போலீசார் பயன்படுத்தினர்.
துருக்கி: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைத் துருக்கி பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது. காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேல் விவகாரத்தில் அங்கே பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு தேவை என்தை துருக்கி வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் துருக்கியில் நடந்துள்ள இச்சம்பவம் சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் ஆரம்பித்தது முதலே துருக்கியில் இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. அப்படி நடந்த ஒரு போராட்டம் தான் திடீரென வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டோர் திடீரென அங்கிருந்த அமெரிக்க ராணுவ தளத்தில் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த துருக்கி போலீசார உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்,

பரபரப்பு: இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் துருக்கி மற்றும் பாலஸ்தீன் கொடிகளை ஏந்தியவாறு வந்த போராட்டக்காரர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். அவர்கள் அமெரிக்க ராணுவ தளத்தில் நுழைய முயன்றதால் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியதையும் போராட்டங்களை விரட்ட போலீசார் முயன்றுள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோரில் சிலர் துருக்கி போலீசாருடன் வன்முறையில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகள், கற்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீது வீசியுள்ளனர். அப்போது நிலைமை கட்டுப்படுத்த அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை போலீசார் வீசியுள்ளனர். அப்போது பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. போலீசார் கடும் முயற்சிக்குப் பின்னரே அங்கே போராட்டக்காரர்களை விரட்டி அங்கே அமைதியைக் கொண்டு வந்தனர். அமெரிக்க ராணுவ தளத்தில் துருக்கி மக்கள் நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications