பிரிட்டனை குறிவைக்கும் ரஷ்யா? ஏவுகணை தாக்குதலுக்கு தயாராகும் புதின்? வார்னிங் செய்த முக்கிய புள்ளி
மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தீவிரமாகி வருகிறது. இதில் பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் விளாடிமிர் புதின் நேரடியாக பிரிட்டனை தாக்குவார் என்று அந்த நாட்டின் எம்பி ஆண்ட்ரி குருலேவ் கடும் வார்னிங்கை அளித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமாகி உள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பதிலடியாக ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று அமெரிக்கா தயாரித்த 6 ATACMS பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் பிரிட்டன் தயாரித்த 6 ஸ்ட்ரோம் ஷாடோ குரூஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அதோடு ட்ரோன் தாக்குதலையும் உக்ரைன் மேற்கொண்டது. இந்த தாக்குதலால் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கடும் கோபமடைந்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு உதவினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்து இருந்தார்.
தற்போது ரஷ்யா - பிரிட்டன் இடையே நேரடி மோதல் என்பது ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மீது ரஷ்யா அதிபர் விளாடிமிர் பதின் நேரடியாக தாக்குதல் நடத்துவார் என்று புதின் ஆதரவு எம்பியான ஆண்ட்ரி குருலேவ் எச்சரிக்கை செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
‛‛விளாடிமிர் புதின் நேரடியாக பிரிட்டனை தாக்குவார். பிரிட்டன் என்பது பூமியில் இல்லாமல் இருப்பதற்கு இதுவே நேரடியகாரணம் என்று நான் நம்புகிறேன். இதை நான் மட்டும் நம்பவில்லை. உலக மக்களில் 80 சதவீதம் பேர் நாங்கள் செய்யப்போவதை பாராட்டுவார்கள். இது நிச்சயம். பிரிட்டன் மீது நாம் தாக்கும் நேரம் வரும். இது தவிர்க்க முடியாதது'' என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளை கடந்து தற்போது தீவிரமாக நடந்து வந்தாலும் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் பதவியேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் மூலம் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் தான் அந்த நாட்டு தலைவர்களின் பேச்சுக்கள் உள்ளன. இதுபற்றி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ‛‛டொனால்ட் டிரம்புடன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனைகளும் இன்றி தயாராக இருக்கிறேன்'' என்றார். அதேபோல் டொனால்ட் டிரம்ப் சார்பில், ‛‛புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும், ‛‛டிரம்ப் சக்திவாய்ந்த தலைவர். அவரால் போரை நிறுத்த முடியும். அவர் பதவியேற்றதும் ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும்'' என்று கூறியுள்ளனர். தலைவர்களின் இந்த வார்த்தைகள் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் உக்ரைனுக்கு பிரிட்டன் வழங்கிய ஏவுகணையால் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவு எம்பி ஆண்ட்ரி குருலேவ் கொந்தளித்து பிரிட்டன் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications