மோடி அமெரிக்காவுக்கு வரட்டும்: போராட தயாராகும் எதிர்ப்பாளர்கள்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வரும்போது அவருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்த பல அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
பிரதமர் நரேதிர மோடி அமெரிக்கா வருகையில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த மோடிக்கு எதிரான அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அண்மையில் துவங்கப்பட்ட அலையன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அன்ட் அகவுண்டபிளிட்டி(ஏஜெஏ) அமைப்பு மோடி வரும் 28ம் தேதி நியூயார்க், மான்ஹாட்டனில் இருக்கும் மேடிசன் ஸ்கொயர் கார்டனுக்கு வருகையில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளது.

சிக் ஃபார் ஜஸ்டிஸ்(எஸ்எப்ஜே) என்ற அமைப்பு வரும் 30ம் தேதி மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கும்போது வெள்ளை மாளிகைக்கு எதிராக உள்ள பூங்காவில் போலி நீதிமன்ற கூடு அமைத்து குஜராத் கலவரம் தொடர்பாக அவர் மீது குற்றம்சாட்ட உள்ளது.
மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய-அமெரிக்கர்களுக்கு ஏஜெஏ அமைப்பு ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்துள்ளது. ஏஜெஏ அமைப்பில் பெரும்பாலும் இந்திய-அமெரிக்க நிறுவனங்கள், தனிநபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவருக்கு அமெரிக்கா விசா வழங்கக் கூடாது என்று கூறி பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்க இந்தியர்கள் தயாராகி வருகிறார்கள்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications