பேசாம இங்க வந்துருங்கன்னு புடின் கூப்பிடுகிறார்.. சொல்கிறார் "ஜில் ஜில் ஜிகா ஜிகா" பெர்லுஸ்கோனி
ரோம்: இத்தாலியின் முன்னாள் பிரதமரும், ஏகப்பட்ட கில்மா செயல்பாடுகை மேற்கொண்டு வந்தவரும், பல வழக்குகளில் சிக்கியவருமான சில்வியோ பெர்லுஸ்கோனி, தன்னை ரஷ்யா வந்து விடுமாறு விலாடிமிர் புடன் கூப்பிடுதாகவும், அமைச்சர் பதவி தருவதாக கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் இந்த பெர்லுஸ்கோனி. மிகப் பெரிய உல்லாசப் பேர்வழி. பிரதமராக இருந்தபோது இவர் அனுபவிக்காத கில்மாக்களே கிடையாது. பெரிய ஜில்பான்ஸ் அரசியல்வாதியாக வலம் வந்தவர்.
ஆடம்பர பார்ட்டிகள், மது விருந்து, மாதுக்களுடன் கும்மாளம் என இவர் அடிக்காத லூட்டியே இல்லை. ஒரு மைனர் பெண்ணுடன் உறவு கொண்டதாக கூட இவர் வழக்கில் சிக்கினார்.

78 வயது "எழுச்சித் தலைவர்"
பெர்லுஸ்கோனி ஒரு வித்தியாசமான தலைவர். நாடே நாசமாகப் போனாலும் பரவாயில்லை நான் மட்டும் குஜாலாக இருந்தால் போதும் என்ற நல்லெண்ணம் படைத்தவர். எப்போதும் "எழுச்சி"த் தலைவராக திகழ்ந்து வந்தவர்.

சரமாரி புகார்களில் சிக்கியவர்
இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்தன. செக்ஸ் பார்ட்டிகள் வைப்பதாக மிகப் பெரிய புகார் இருந்தது. நிதி முறைகேடு, வரி கட்டாமல் ஏமாற்றியது உள்பட பல புகார்களைச் சந்தித்தார்.

சின்னப் பெண்ணுடன் உறவு
மேலும் ரூபி என்ற மைனர் வயதுப் பெண்ணுடன் உறவு கொண்டதாகவும் இவர் மீது புகார் எழுந்தது. ஆனால் பல புகார்களிலிருந்து இவர் எப்படியோ விடுதலையாகி விட்டார்.

தெரியாமல் செய்திருப்பார்
ரூபி விவகாரத்தை விசாரித்த கோர்ட், அவர் மைனர் பெண் என்பது பெர்லுஸ்கோனிக்குத் தெரியாமல் போயிருக்கலாம் என்று கூறி விடுதலை செய்து விட்டது.

எம்.பிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்
இந்த நிலையில் தான் இவருக்கு சமீபத்தில் எம்.பி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கி்ல் 3 ஆண்டு சிறைத் தண்டனை இவருக்குக் கிடைத்தது.

புடினின் அழைப்பு
இநதப் பின்னணியில் தனது போர்ஸா இத்தாலியா கட்சியின் சார்பில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார் பெர்லுஸ்கோனி. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் இத்தாலியில்தான் ஓரம் கட்டப்பட்டுள்ளேன். ஆனால் புடின் என்னை மதிக்கிறார். அழைக்கிறார்.

ரஷ்ய குடியுரிமை தர தயார்
எனக்கு ரஷ்ய குடியுரிமை தர தயாராக இருப்பதாக புடின் கூறியுள்ளாம். மேலும் பொருளாதாரத் துறை அமைச்சர் பதவியைத் தருவதாகவும் கூறியுள்ளார் என்றார் பெர்லுஸ்கோனி.

பிரான்ஸ் நடிகருக்கு குடியுரிமை கொடுத்த புடின்
ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் பிரான்ஸைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜெரார்ட் டிபார்டியூவுக்கு ரஷ்ய குடியுரிமை கொடுத்து தனது நாட்டுக்கு இழுத்தார் புடின் என்பது நினைவிருக்கலாம்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications