புதின் புகழ் பாடும் ரஷ்ய ஹோட்டலில்... டாய்லெட் பேப்பரில் ஒபாமாவின் போட்டோ.!
மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவறையில் ‘டாய்லெட் பேப்பரில்'அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து சுமார் 4,000 மைல்கள் தொலைவில் உள்ளது கரஸ்னோயார்க்ஸ் நகரம். இங்கு கடந்த மாதம் பிரசிடெண்ட் பேக் என்ற ஹோட்டல் திறக்கப்பட்டது.
Портреты Обамы на туалетной бумаге в красноярском кафе "Президент" Путин. Великая страна Россия- великая победа pic.twitter.com/vnO7JdIILR
— Ivan Buben (@BubenIvan) April 6, 2016
இதன் சிறப்பம்சமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பெருமைப்படுத்தும் வகையில், அந்த ஹோட்டல் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படங்கள் தான். ஹோட்டலின் வரவேற்பறையில் புதினின் குழந்தைப் பருவம் முதல் அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றது வரையிலான பல்வேறு புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கூடவே, புதினின் மெழுகுச்சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. உணவகத்திற்கு வருபவர்கள் அதன் அருகில் நின்று விரும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
புதினின் புகைப்படங்கள் மட்டுமின்றி, இந்த ஹோட்டலில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா , ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மோர்கல் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம் பிடித்துள்ளன.
புதினின் அருமை பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக அந்த ஹோட்டலை அலங்காரப்படுத்தியுள்ள அதன் உரிமையாளர், அமெரிக்காவை அவமானப்படுத்தும் வகையில் செய்த செயல் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், இந்த ஹோட்டலின் கழிப்பறையில் தரையில் விரிக்கப்பட்டுள்ள விரிப்பு அமெரிக்க கொடியின் அமைப்பில் உள்ளது. கூடவே, அங்கு வைக்கப்பட்டுள்ள டாய்லெட் பேப்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து அந்த ஹோட்டலுக்கு சாப்பிட போன சிலர், புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் அமெரிக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications