ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலைகாரன்... அவர் உரிய விலையை கொடுக்க வேண்டும்... பாய்ந்து அடிக்கும் பைடன்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா இதற்கு உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்று அதிபர் பைடன் எச்சரித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் டிரம்ப் படுதோல்வி அடைந்தார்.

இந்த அதிபர் தேர்தலை டிரம்பிற்கு ஆதரவாக மாற்ற ரஷ்யா முயன்றதாக குற்றச்சாடுகள் எழுந்தன. இது தொடர்பான முக்கிய ரகசிய ஆவணங்களை அமெரிக்க உளவு துறை நேற்று வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதின் தலையீடு

புதின் தலையீடு

டிரம்பின் பிரசார குழுவிலிருந்த முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு ரஷ்யா உயர் அதிகாரிகள் உதவியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமர் புடினின் ஒப்புதல் உடனோ, அல்லது அவரது மேற்பார்வையிலோ இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலையைக் கொடுக்க வேண்டும்

விலையைக் கொடுக்க வேண்டும்

இந்நிலையில், ஏபிசி நிறுவனத்திற்கு பைடன் அளித்த நேர்காணலில் ரஷ்யாவை பைடன் கடுமையாகச் சாடியுள்ளார். ரஷ்யா நிச்சயம் இதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் என்று அவர் தெரிவித்தார். மேலும், நீண்ட காலத்திற்கு முன் ரஷ்ய அதிபர் புதின் உடன் உரையாடியதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது "என்னைப் பற்றி உங்களுக்கு (புதினுக்கு) தெரியும், நீங்கள் யார் என எனக்குத் தெரியும். அமெரிக்காவில் எனது ஆட்சி அமைந்தால் எதற்கும் தயாராக இருங்கள்" என்று கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

புதின் ஒரு கொலைகாரன்

புதின் ஒரு கொலைகாரன்

மேலும், புதினை ஒரு கொலைகாரன் என்று நீங்கள் கருதுகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு, ஆம் என்று பைடன் பதிலளித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா நேரடி தலையிட்டது உறுதியாகியுள்ளதால், அமெரிக்க அதிபர் பைடன் கடும் கோபத்தில் உள்ளார். இதன் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விரைவில் புதிய தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா தலையீடு?

சீனா தலையீடு?

இதேபோல சீனாவும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டி இருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று நேற்று வெளியான ரகசிய அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் கியூபா, வெனிசுலா மற்றும் லெபனான் பயங்கரவாத குழுக்களும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட முயன்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+