Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டிரம்பை பார்த்து பயப்படும் புதின்.. பேசவே பயப்படுறாரு..!" வம்பு இழுக்கும் ஜெலன்ஸ்கி! என்ன மேட்டர்?

Subscribe to Oneindia Tamil

கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சூழலில் இதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது தீவிரமான முயற்சியை எடுத்து வருகிறார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்பை பார்த்தால் புதினுக்கு பயம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா ஒரு முன்மொழிவை வைத்துள்ளது. முதலில் தற்காலிக போர் நிறுத்தம்.. பிறகு நிரந்தர போர் நிறுத்தம் என்பதே அதன் சாரம்சம்.. ஆனால், அதை புதின் ஏற்பது போல தெரியவில்லை.. தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அவர் உடன்படுவது போலத் தெரியவில்லை. இதற்கிடையே இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார்.

US Ukraine Zelenskyy

ஆவேசம்

ரஷ்ய அதிபர் புதினின் பேச்சு சூழ்ச்சிகரமானது என்று குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, புதின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிக்கப் போகிறார் என்றும் ஆனால் அதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் நேரடியாகச் சொல்லப் பயப்படுகிறார் என்றும் சாடினார். மேலும், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.

புதின் திட்டம் இதுதான்

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை புதின் நிச்சயம் நிராகரிக்கப் போகிறார். அவருக்கு இந்த போரைத் தொடங்க வேண்டும். உக்ரைன் மக்களைக் கொல்ல வேண்டும் என்பதே திட்டம். ஆனால், இதை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் சொல்லப் பயப்படுகிறார். புதினுக்கு போரை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை இதன் காரணமாகவே சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்து வருகிறார். இதுபோல செய்தால் எதுவும் நடக்காது.. நீண்ட காலத்திற்குப் போர் தொடர வேண்டும் என்பதாலேயே இப்படிச் செய்கிறார்.

தற்காலிகமாகப் போரை நிறுத்தினால் தான் பாதுகாப்பு மற்றும் அமைதி மீட்டெடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைக் கண்டறிய முடியும். போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தை வகுக்கத் தற்காலிக போர் நிறுத்தம் முக்கியமானது. ஆனால், அதில் புதினுக்கு சுத்தமாக விருப்பமில்லை" என்றார்.

ரஷ்ய அதிபர் புதின்

முன்னதாக தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பாகப் பேசிய புதின், அமெரிக்காவின் முன்மொழிவைக் கொள்கை ரீதியாக ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார். அதேநேரம் அந்த முன்மொழிவில் பல விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் தங்களுக்கு என சில நிபந்தனைகளை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு முன்பு பல கட்ட ஆலோசனைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், "தாக்குதலை நிறுத்தும் திட்டத்துடன் நாங்கள் உடன்படுகிறோம். ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தம் என்பது நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றும் வகையாக இருக்க வேண்டும்" என்றார்.

ரஷ்யா உக்ரைன் மோதல்

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. இந்த மோதலில் இதுவரை பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பல லட்சம் பேர் சொந்த வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே முதலில் தற்காலிக போர் நிறுத்தம், பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்திருந்தார்.

ஆனால், புதின் அதை ஏற்பது போலத் தெரியவில்லை.. நேரடியாக நிரந்தர போர் நிறுத்தத்தையே அவர் வலியுறுத்துகிறார். அதேநேரம் போரை நிறுத்த முன்முயற்சி எடுத்ததற்காக டிரம்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக புதின் தெரிவித்தார். புதினின் இந்த பேச்சு போர் இப்போதைக்கு முடிய வாய்ப்பு குறைவு என்பதையே உணர்த்துகிறது. ஏற்கனவே போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் நிலையில், புதினின் இந்த பேச்சு அமைதி திரும்புவதைத் தாமதப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+