மனைவியை முறைப்படி விவாகரத்து செய்தார் ரஷ்ய அதிபர் புடின்
Subscribe to Oneindia Tamil

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திருமணமாகி 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவி லியுட்மிலாவை பிரிவதாக கடந்த ஆண்டு தொலைக்காட்சியில் தெரிவித்தார். புடின் தனது மனைவி மற்றும் மகள்களிடம் தனது தனிப்பட்ட விஷயங்களை தெரிவிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஓராண்டு கழித்து தற்போது புடின் தனது மனைவியை முறையாக விவாகரத்து செய்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புடின் ஒலிம்பிக் வீராங்கனை அலினா கபயேவாவை திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியானது. அலினா புதினுக்கு திருமணமான 1983ம் ஆண்டு பிறந்தவர். இந்நிலையில் தான் அலினாவை திருமணம் செய்யப் போவதில்லை என்று புடின் தெரிவித்தார்.
அதிபர் புடின், அவரது மனைவிக்கு இடையே முறைப்படி விவாகரத்தாகிவிட்டது என்று அரசு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications