ஆண்மையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் புடின் என்ன செய்கிறார் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ஆண்மையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் புடின் சிவப்பு மானின் ரத்தத்தில் குளிப்பார் என தெரியவந்துள்ளது. இதற்கான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். திடீர் திடீரென சர்ச்சையில் சிக்குவது இவரது வாடிக்கை.

ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் அதிகாரியான அலெக்ஸாண்டர் லித்வினென்கோ,
கடந்த 2016ஆம் ஆண்டு புடின் சிறுவன் ஒருவனுடன் உடலுறவு கொண்டார் என தனது பிளாக்கில் எழுதினார்.

உளவாளி மர்ம மரணம்

உளவாளி மர்ம மரணம்

இதையடுத்து அவர் மர்மமான முறையில் ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்து கிடந்தார். சரி அந்தக் கதை இருக்கட்டும்.. தற்போது புடின் குறித்த மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

புடினின் ரத்தக்குளியல்

புடினின் ரத்தக்குளியல்

என்னவெனில் அதிபர் புதின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க சிவப்பு மானின் இரத்தத்தில் குளிப்பார் என தெரியவந்துள்ளது. இதற்காக அல்டை மலைக்கு விசிட் அடிக்கும் அவர் அங்குள்ள பண்ணை வீட்டில் சிவப்பு மானின் ரத்தத்தில் குளிப்பாராம்.

கொம்புகளில் இயற்கை வயாகரா

கொம்புகளில் இயற்கை வயாகரா

அதாவது, மாரல் மான்கள் என கூறப்படும் சிவப்பு மான்களின் கொம்புகளில் இயற்கையான வயாகரா மற்றும் ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள் இருக்கிறது என கூறப்படுகிறது. இவ்வகை மான்களின் கொம்புகளை வெட்டி அதன் இரத்தத்தை குளியல் தொட்டியில் ஊற்றி குளிப்பது என்ற வழக்கம் அல்டை மலைப்பகுதியில் பழங்காலத்திலிருந்தே ஃபாலோ செய்யப்படுகிறதாம்.

புடின் மட்டுமல்ல

புடின் மட்டுமல்ல

இந்த இடத்துக்கு பல தடவை சென்றுள்ள புதின் இரத்தம் உள்ள குளியல் தொட்டியில் குளிப்பார் என தெரிகிறது. ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவும் ஆண்மையை அதிகரிக்கும் இந்த இரத்த குளியலை மேற்கொள்வார் என்பதும் தெரியவந்துள்ளது.

மருத்துவரே சொன்னதாம்

மருத்துவரே சொன்னதாம்

மருத்துவரின் ஆலோசனைப் படியே புடின் இந்த இரத்தக் குளியலை மேற்கொள்கிறாம். மான் இரத்தத்தில் குளிப்பதால் உடல் எலும்புகள், தசைகள், பற்கள் வலுவாகுமாம். ஆஸ்துமா, மூட்டு வலி மற்றும் முதுகுத்தண்டில் உள்ள பிரச்சினைகள் குணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மான்களின் ரத்தம்

சிவப்பு மான்களின் ரத்தம்

முதலில் சிவப்பு மான்களின் கொம்புகளில் உள்ள இரத்தம் எடுக்கப்பட்டு சூடு செய்யப்படுகிறது. பிறகு குளியல் தொட்டிகளில் இரத்தம் ஊற்றப்பட்டு குளிக்க ஏதுவாக தயார் செய்யப்படுகிறது என கூறப்படுகிறது.

Vladimir Putin puts India's tie with Russia on top | Oneindia News
கசிந்த போட்டோக்கள்

கசிந்த போட்டோக்கள்

புடினின் ரத்தக் குளியல் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. எத்தனையோ வயாக்கரா மாத்திரைகள், லேகியங்கள் இருக்கும் போது இந்த நவீன காலத்தில் புடின் மான்களின் ரத்தத்தில் குளிப்பது மிருகத்தனமானது என விலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vladimir Putin is bathing in blood extracted from the severed antlers of Maral deer in an attempt to boost his health, according to extraordinary reports in the Russian media.
Please Wait while comments are loading...