நெப்போலியனுக்கே அந்த நிலைமைதான்.. நீங்க எம்மாத்திரம்! பிரான்ஸுக்கு புதின் பகிரங்க வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனை அமெரிக்கா கழற்றிவிட்ட நிலையில், பிரான்ஸ் சப்போர்ட்டுக்கு வந்திருக்கிறது. ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைன்தான் ஒரே வழி என்று கூறி, அந்நாட்டுக்கு தேவையான ராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் செய்ய வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். இந்த கருத்து ரஷ்யாவை கடுப்பாக்கியுள்ளது.

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் ஒரு காலத்தில் ரஷ்யாவை கைப்பற்ற முயன்று தோல்வியடைந்தார். அதேபோல, இப்போதும் பிரான்ஸ் மண்ணை கவ்வ போகிறது என்று புதின் எச்சரித்துள்ளார்.

Putin Macron

பிரான்ஸ் அதிபரின் பேச்சு:

வேலியில் போகிற ஓணானை தூக்கி வேட்டிக்குள் விட்டுக்கொண்ட கதையாக பிரான்ஸ் அதிபரின் பேச்சு இருக்கிறது. நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் தோன்றி அந்நாட்டு மக்களிடம் பேசிய அதிபர் இமானுவேல் மாக்ரோன், "எங்களுக்கும் ஐரோப்பாவிற்கும்.. ரஷ்யா அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. எனவே நாங்கள் அணு ஆயுத பாதுகாப்பை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுபடுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஐரோப்பிய வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பவும் யோசித்து வருகிறோம்.

வம்பிழுக்கும் பிரான்ஸ்:

சமூக வலைதளங்களில் பொய்களை பரப்பி.. ரஷ்யா நம்மை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. அது நமது எல்லைகளை சீண்டி பார்க்கிறது. இப்போது நடக்கும் போரில் உக்ரைனுடன் ரஷ்யா நின்றுவிடும் என்று யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவுக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும்" என்று வெடித்து பேசியிருக்கிறார்.

ரஷ்யாவின் பதிலடி:

இதற்கு புதின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். "ஒரு காலத்தில் எங்கள் நாட்டை பிரான்ஸ் கைப்பற்ற முயன்றது. ஆனால், முடியவில்லை. எதிர்காலத்திலும் இது முடியாது. ஏனெனில் எங்களிடம் துணிச்சலான வீரர்கள் இருக்கிறார்கள். 1812 ஆம் ஆண்டு ரஷ்யாவை கைப்பற்ற முயன்ற நெப்போலியன் கடைசியில் மண்ணைதான் கவ்வினார். போரின் முடிவை மறந்து மீண்டும் ரஷ்யாவை வெற்றிக்கொள்ள நினைப்பதில் அர்த்தம் இல்லை" என்று கூறியுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், "கடந்த காலங்களில் நெப்போலியனும், ஹிட்லரும் ரஷ்யாவை வெற்றிக்கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே விரும்பினார்கள். ஆனால், மாக்ரோன் இப்படி வெளிப்படையாக பேசவில்லை. மறைமுகமாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மாறும் போரின் தன்மை:

உக்ரைனுக்கு பிரான்ஸ் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால் பிரான்ஸ் ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு இந்த போரில் உக்ரைனால் ஜெயிக்க முடியாது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் உதவிக்கு வரும். இதில் பெரிய தலைக்கட்டு பிரிட்டன்தான். பிரிட்டன் இந்த போரில் இறங்கிவிட்டால் மொத்த ஐரோப்பிய நாடுகளும் வந்துவிடும். இது 3வது உலகப்போருக்கு வழி செய்துவிடும். இதற்கு தொடக்கப்புள்ளி பிரான்ஸாகத்தான் இருக்கும்.

போர் வளர்வது தவிர்க்கப்பட வேண்டும் எனில், உக்ரைனும்-ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் தலையீடு செய்தால் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+