என் மகனை சுட்டுக் கொல்லுங்கள்.. படுகொலை செய்யப்பட்ட பாக்.மாடல் அழகி குவான்டீலின் தந்தை ஆவேசம்!
இஸ்லாமாபாத்: சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டு கொல்ல வேண்டும் என்று பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பிரபல மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் தந்தை கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் செலிபிரிட்டி மாடல் அழகியாக வலம் வந்தவர் குவாண்டீல் பலூச். இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து சலசலப்பை உருவாக்கி வந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக இருந்த ஷாஹித் அப்ரிதியைத் திட்டுவது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பது என தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஜூலை 14 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில், குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசிம், பலூச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது.
தற்போது வாசிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் தான்தான் கொலை செய்தேன் என்று தனது தங்கைக்குத் தெரியாது என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் "அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்ல வேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் மகளை கொலை செய்து விட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications