விமானத்தில் பயணிகள் பேஜர், வாக்கி-டாக்கி கொண்டு வரக்கூடாது.. தடை விதித்த கத்தார் ஏர்வேஸ்!
பெய்ரூட்: பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான மின்னணு சாதனங்கள் வெடித்ததை அடுத்து, லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவுறுத்தலின்படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது.

இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி பிற்பகலில் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 100க்கும் அதிகமான பேஜர்கள் அடுதடுத்து வெடித்துச் சிதறின. இதில், ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்பட 12 பேர் பலியாகினர். 2500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அடுத்த நாள் மீண்டும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில், 10க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகினர். லெபனானில் மின்னணு கருவிகளின் வாயிலாக தாக்குதல் சம்பவம் நடைபெறுவதால் அந்த நாட்டு மக்கள் போனை பார்த்தே பயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொடர் சம்பவங்களின் எதிரொலியாக லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் பெய்ரூட்டில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்களை பயணிகளிடம் வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அத்தகைய மின்னணு சாதனங்கள் விமானம் மூலம் அனுப்பப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) புறப்படும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்தது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களுடனோ, தாங்கள் கொண்டு வரும் பைகளுடனோ, பேஜர், வாக்கி டாக்கி ஆகியவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமூகமான பயணத்தை உறுதிசெய்ய பயணிகள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications