கத்தாரில் தமிழர்கள் 2 பேருக்கு மரண தண்டனை அரசு நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை
தோகா: கத்தாரில் வரும் 30-ஆம் தேதிக்குள் 2 தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்ற உள்ளதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தார் நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன், விருதுநகரை சேர்ந்த செல்லத்துரை ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுட்டது. சேலத்தை சேர்ந்த சிவகுமாருக்கு 25 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழர்கள் இருவருக்கும் வரும் 30-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற கத்தார் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் செய்யாத குற்றத்திற்கு மூவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு அவர்கள் 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்கள் கத்தார் நாட்டு சிறையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

செல்லத்துரையின் மனைவி
கட்டுமானத் தொழிலாளரான செல்லத்துரை கடந்த 2011-ம் ஆண்டு கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது குறித்து தீப்பட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் அவரது மனைவி ராஜம்மா கூறியவதாவது: இந்தியாவில் இருந்து கத்தார் சென்றதிலிருந்து அவரிடம் நாங்கள் பேசியதில்லை. மூன்று மாதத்திற்கு முன்பாக அவர் எங்களை தொடர்பு கொண்டு தான் சிறையில் இருப்பதாக கூறினார். மேலும், இந்த வழக்குக்கும் எனக்கு தொடர்பு இல்லை. விரைவில் விடுதலையாவேன் என தெரிவித்ததாக அவர் கூறினார்.

வழக்கறிஞர்
கத்தார் சென்று சிறையில் உள்ள 3 பேரையும் சந்தித்து வந்த வழக்கறிஞர் சுரேஷ்குமார் இது குறித்து கூறியதாவது: சிறையில் உள்ள 3 பேரும் தாங்கள் நிரபராதிகள், நாங்கள் கொலை செய்யவில்லை என என்னிடம் கூறினர். தோகாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இது குறித்த முறையான ஆவணங்கள் இல்லை. அங்கு இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவின் நகல் கூட இல்லை. சிறையில் உள்ள மூன்று பேரும் மன அழுத்தத்தில் உள்ளனர்.

இந்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்
இந்திய அரசு இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் மேல் முறையீடு செய்ய வேண்டும். இந்திய அரசு மேல்முறையீடு செய்தால் மட்டுமே, அதை கத்தார் அரசு கருத்தில் கொள்ளும். தற்போது இந்திய அரசு இந்த வழக்கில் தமிழக அரசின் பதிலுக்குக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

உரிய பதில் இல்லை
செல்லத்துரையின் உறவினர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜுன் 6-ந் தேதி கோரிக்கை மனு அளித்துத்தனர். மேலும், கடந்த ஜூலை 17-ந் தேதி முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பிதாகவும், ஆனால் தமிழக அரசிடம் இருந்து உரிய பதில் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications