வெளிநாடு செல்வோருக்கு இலவச தொலைபேசி வசதி: 82 நாடுகளில் கத்தார் அரசு அறிமுகம்
துபாய்: பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கத்தார் நாட்டு மக்களுக்கு இலவச தொலைபேசி வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இலவச தொலைபேசி வசதி முதல்கட்டமாக 82 நாடுகளில் செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் மேலும் 16 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் கத்தார் நாட்டு குடிமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு செயல்படுத்தும் இலவச திட்டம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகள்....?
இந்த இலவச தொலைபேசி வசதிக்காக கத்தார் டெல்கோ ஊரிடு நிறுவனம் குறிப்பிட்ட 82 நாடுகளுடன் தனது ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டது என செய்தி வெளியிட்டுள்ள பத்திரிகைக்ள், அவை எந்தெந்த நாடுகள் என்ற விபரத்தை வெளியிடவில்லை.

பாதுகாப்புக் காரணங்களுக்காக....
தகவல் தொடர்பு சேவையுடன் கூடுதலாக அளிக்கப்படும் இந்த இலவச தொலைபேசி வசதியானது வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களைப் பற்றிய அரசு அக்கறையையும் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் அரசு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என அந்நாட்டுத் தகவல் தொலைத்தொடர்புத் துறையின் இயக்குனர் சைப் அல் குவாரி தெரிவித்துள்ளார்.

எந்நேரமும் தொடர்பில்....
இந்த ஏற்பாட்டின்படி வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் அங்கு எந்நேரமும் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படுமாம். மேலும் இந்த அலுவலகம் கத்தாரின் வெளிநாட்டுத் தூதரகங்களுடனும், அதிகாரிகளுடனும் எப்போதும் தொடர்பில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசு செலவில்....
இந்த இலவச தொலைப்பேசிக்காக சேவைக்கு ஆகும் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு....
அதுமட்டுமின்றி, கத்தார் மக்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு சென்று சேர்ந்தவுடன் கத்தார் அரசு சார்பில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு தகவலும் அனுப்பப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரே எண்....
இலவச சேவை நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் அனைத்து நாடுகளுக்கும் ஒரே எண்ணைப் பெற முயற்சித்தது கத்தார் அரசு. ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் என தெரிய வந்ததால், தற்போதைக்கு குறிப்பிட்ட 42 நாடுகளுக்கு 8000 8000 100 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேறு எண்கள்....
இதனைத் தவிர, மீதமுள்ள மற்ற நாடுகளில் இந்தத் தொலைபேசியின் எண் மாறிவரும் என இயக்குனர் குவாரி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications