இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ராணி எலிசபெத்துக்கே இடம் இல்லை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சன்டே டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அந்நாட்டு ராணி எலிசபெத்துக்கு இடம் இல்லை.

பிரபலமான சன்டே டைம்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 1000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல்முறையாக இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பெயர் முதல் 300 பேரில் இல்லை.

லென் பிளாவட்னிக்

லென் பிளாவட்னிக்

உக்ரைனில் பிறந்து இங்கிலாந்தில் செட்டிலான தொழில் அதிபர் லென் பிளாவட்னிக் இங்கிலாந்தின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு 13.7 பில்லியன் பவுண்ட் ஆகும். கடந்த ஆண்டு அவர் இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருந்தார்.

இந்துஜா சகோதரர்கள்

இந்துஜா சகோதரர்கள்

இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்களான ஸ்ரீ மற்றும் கோபி உள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 13 பில்லியன் பவுண்ட் ஆகும். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்கள் இந்துஜா சகோதரர்கள்.

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

1989ம் ஆண்டு இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அந்நாட்டு ராணி எலிசபெத் இந்த ஆண்டு முதல் முறையாக முதல் 300 இடங்களில் வரவில்லை. ராணி பணக்காரர் தான் ஆனால் பெரும் பணக்காரர் இல்லை.

சொத்து

சொத்து

இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ராணி எலிசபெத்துக்கு 302வது இடம் தான் கிடைத்துள்ளது. ராணியின் சொத்து மதிப்பு 340 மில்லியன் பவுண்ட் ஆகும். அவரது சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 10 மில்லியன் பவுண்ட் அதிகரித்தும் அவரது நிலைமை இவ்வாறு உள்ளது.

பெரும் பணக்காரர்கள்

பெரும் பணக்காரர்கள்

இங்கிலாந்தில் வசிக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மட்டும் 80 பெரும் பணக்காரர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+