ஓரினச் சேர்க்கை குற்றம்: ‘நவீன கணினியியலின் தந்தைக்கு’ 60 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு
லண்டன்: ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்ட நவீன கணினியியலின் தந்தைக்கு கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது.
நவீன கணினியியலின் தந்தை என வர்ணிக்கப் பட்டவர் ஆலன் ட்யூரிங்க் என்ற பிரிட்டிஷ் கணிதவியலாளர். இவர் மீது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப் பட்ட அவர், அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.
அவரது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க நீண்ட காலமாகவே பலர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிடப் பட்டுள்ளது.

எனிக்மா....
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர்கள் பயன்படுத்திய "எனிக்மா" என்ற சங்கேதக் குறியீட்டு மொழியை கட்டுடைப்பதில் முக்கிய பங்காற்றியவர் நவீன கணினியியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஆன டாக்டர் ஆலன் ட்யூரிங்க்.

சிறைத்தண்டனை....
1952ம் ஆண்டு, இவருக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு இருந்த பாதுகாப்பு அனுமதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

தற்கொலை....
சிறையில் அவருக்கு ஆண்மை நீக்கும் சிகிச்சை அளிக்கபட்டது. அதனைத் தொடர்ந்து, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ட்யூரிங் சயனைட் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜமன்னிப்பு...
அவரது மரணம் ஒரு தற்கொலை என்று மரண விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது. நவீன கணினியியலின் தந்தையான இவர் மீது விழுந்த அவப்பெயரை நீக்க பிரதமர் டேவிட் கேமரூன் அரசாங்கம் அரசாங்கம் முன்வைத்த வேண்டுகோளை அடுத்து இங்கிலாந்து ராணி எலிசபத் அவருக்கு மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications