2 தலை பாம்பு பாத்திருப்பீங்க.. 2 தலை பல்லி பார்த்திருக்கீங்களா... இஸ்ரேலுக்குப் போனா பார்க்கலாம்!
டெல் அவிவ், இஸ்ரேல்: இஸ்ரேலில் இரண்டு தலைகளைக் கொண்ட சலமாண்டர் வகையைச் சேர்ந்த நீர்வாழ் பல்லி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் ஹைபா பல்கலைக்கழகத்தின் சமூக சுற்றுச்சூழல் ஆய்வகத்தில்தான் இந்த அரிய வகை லார்வா நிலையில் உள்ள சலமாண்டர் கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் காரணமாக இந்த இரண்டு தலை கொண்ட பல்லி பிறந்துள்ளது.
இந்த மரபணு மாற்றக் குறைபாடு ஏற்பட்டதற்கான காரணத்தினைக் கண்டறிய இயலாமல் விஞ்ஞானிகள் குழம்பிப் போயுள்ளனர்.

சுற்றுச் சூழல் மாறுபாடுகள்:
இதற்கான காரணமாக நீர்நிலைகளின் சுத்தமின்மை, கதிரியக்க மாறுபாடுகள், குறையும் இனப்பெருக்கம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிதான உயிரினம்:
உலகிலேயே இந்த இரண்டு தலை சலமாண்டர் மிகவும் அரிதான ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்லி இன சலமாண்டர்:
சலமாண்டர் என்ற இந்த உயிரினம் பார்ப்பதற்கு பல்லியைப் போலத் தோற்றமளிக்கும். பல்லி இனத்தைச் சேர்ந்ததுதான்.

மீண்டும் வளரும் திசுக்கள்:
இந்த உயிரினத்தின் உடல் உறுப்புகள் அதாவது மூளைத் திசுக்கள், இதயத்தின் சில பகுதிகள், தண்டுவடம், கால்கள் ஆகியவை கெட்டுப் போனாலோ அல்லது அறுந்து போனாலோ எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் மீண்டும் வளர்ந்து விடும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்:
இதற்குக் காரணம் இந்த உயிரினத்தின் நோய் எதிர்ப்பு சக்திதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்களுக்கும் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications