ஜப்பானில் தொடரும் மழை.. பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு.. 300 பேரை காணவில்லை
ஜப்பானில் பெய்து வரும் மிகவும் மோசமான மழை காரணமாக இதுவரை அங்கு 130 பேர் பாலியாகி உள்ளனர்.
Recommended Video

டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் மிகவும் மோசமான மழை காரணமாக இதுவரை அங்கு 130 பேர் பாலியாகி உள்ளனர்.
உலக வரலாற்றில் ஜப்பான் இன்னொரு பேரழிவை சந்தித்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் அங்கு சுமார் 650 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும்.ஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது.இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்த மோசமான மழை காரணமாக மொத்தமாக 130 பேர் பாலியாகி உள்ளனர். இதனால் 300 பேர் காணவில்லை. மீட்புப்பணிகளில் மொத்தம் 74,000 பேர் ஈடுபட்டு இருக்கிறார். 2.4 லட்சம் வீடுகளில் உள்ள மக்கள் உணவின்றி கஷ்டபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் அந்த பகுதியைவிட்டு மொத்தம் 20 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
10000க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளது.இன்னும் ஒரு வாரம் அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications