அமெரிக்காவில் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்த்த "கபாலி"
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் கபாலி படத்தின் சிறப்பு காட்சியை ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். படத்தை பார்த்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் இன்று இந்தியாவில் ரிலீஸாகியுள்ளது. கபாலி படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கபாலி படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
|
ரஜினி
அமெரிக்காவில் கபாலி படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது அங்கு ரஜினி வந்ததை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
|
வினியோகஸ்தர்
கபாலி படத்தின் சிறப்பு காட்சி முடிந்த பிறகு ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட படத்தின் அமெரிக்க வினியோகஸ்தர்.
|
பாராட்டு
கபாலி படத்தை பார்த்த அமெரிக்க ரசிகர்களுக்கு ரஜினியின் நடிப்பு மிகவும் பிடித்துவிட்டது. படம் முடிந்த பிறகு அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி ரஜினியை பாராட்டினர்.

காட்சி லீக்
ரஜினியுடன் சேர்ந்து சிறப்பு காட்சியை பார்த்தவர்களில் ஒருவர் தான் முழு படத்தையும் வீடியோ எடுத்து அதில் ஒரு காட்சியை சமூக வலைதளங்களில் கசியவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications