“சுடப்பட்டதும்” சுடச்சுட செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்ட அமெரிக்க பாடகர்!
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் காம்ப்டன் நகரைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவர் பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றபோது எங்கிருந்துோ வந்த துப்பாக்கித் தோட்டாவின் சிதறலால் தலையில் ரத்தம் கொட்டியது. உடனடியாக ரத்தம் சொட்டச் சொட்ட செல்பி வீடியோவை எடுத்து அவர் பேஸ்புக்கில் போட்டு விட அது வைரல் ஆகி விட்டது.
எதை வேண்டுமானாலும் நாம் உடனடியாக உலகுக்குச் சொல்லி விட முடியும். பேஸ்புக் , டிவிட்டர் போன்றவை அதை சாத்தியமாக்கியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க ராப் பாடகர் ஒருவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அடுத்த விநாடியே அதை ரத்தம் சொட்டச் சொட்ட உலகுக்கு தெரிவித்து வைரல் ஆகியுள்ளார்.

ராப் பாடகர்...
காம்ப்டன் நகரைச் சேர்ந்தவர் தெரிக் ராயல். இவர் ஒரு ராப் பாடகர். இவர் காம்ப்டன் நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்குப் போயிருந்தபோது திடீரென அவரது நெற்றிப் பொட்டில் துப்பாக்கித் தோட்டாவின் சிதறல் வந்து விழுந்தது. இதையடுத்து அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது.
God let me walk away from an AK47 dumpin rounds at me and my bros I just want yall to know GOD IS REAL AND GOD LOVES YOU ! ✊✨we living in some dark days , we wasn't even his targets , he was just trigger happy.(I was in shock when I filmed this , 3 bullet fragments on my skull could have pierced my brain... I'm just blessed to see another day and RAP ABOUT IT ) #BushGang #GoneDieSomeKings
Posted by Teriq Royal on Wednesday, October 7, 2015
வீடியோ...
அக்கம் பக்கத்தினர் பதறி ஓடி வந்தனர். ஆனால் ராயலோ தனது செல்போனை் எடுத்து வீடியோவை ஆன் செய்து தன்னையே படம் பிடித்தார். பின்னர் பேஸ்புக்கில் உடனடியாக அப்லோட் செய்து விட்டார். இந்த பரபரப்பான வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

நெற்றியில் தோட்டா...
ரத்தம் சொட்டச் சொட்ட அதில் பேசியுள்ளார் ராயல். அதில், தான் சுடப்பட்டு விட்டதாகவும், நெற்றியில் தோட்டாவின் சிதறல் பாய்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார் ராயல்.

எக்ஸ்ரே...
ஏகே 47 ரக துப்பாக்கித் தோட்டாவின் சிதறல்தான் தனது நெற்றியில் பாய்ந்துள்ளதாகும் அவர் கூறியுள்ளார். அடுத்த படத்தில் ஒரு எக்ஸ்ரேவையும் அவர் போட்டுள்ளார். அதில் தோட்டா சிதறல் தனது தலையில் பாய்ந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications