பார்க்கவே பயமா இருக்கே.. இதுல எப்படிங்க பணத்தை வச்சு எடுகிறது?

ஜப்பான் இளைஞர் ஒருவர் வித்தியாசமான வடிவத்தில் பர்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான வடிவத்தில் பணம் வைக்கும் பர்ஸ் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல் இசைக் கலைஞர் டி.ஜே. ஓவியருமான இவர் சமீபத்தில் வித்தியாசமான பர்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது மனிதனின் வாய் போல தோற்றமளிக்கிறது.

இரண்டு மாத உழைப்பில் இந்த பர்ஸை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். அதோடு தான் உருவாக்கிய பர்ஸின் வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

வாய் வடிவ பர்ஸ்:

அதில் மனிதனின் வாய் மற்றும் கீழ்த்தாடை போன்ற பர்ஸ் உள்ளது. தாடி, மீசை, இளஞ்சிவப்பான உதடு, ஈறுகள் என நிஜ மனித வாய் போலவே இந்த பர்ஸ் மிகவும் தத்ரூபமாக உள்ளது.

பல்லும் இருக்கு:

பல்லும் இருக்கு:

உதடு போன்ற பகுதியை திறந்தால் உள்ளே பல் வேறு பயமுறுத்துகிறது. அதற்குள் இருக்கும் அறையில் தான் பணம் வைக்க வேண்டுமாம். ஆனால் பார்க்கும் நமக்கே எங்கே அந்த வாய் கடித்து விடுமோ என பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு தத்ரூபமாக அதனை அவர் உருவாக்கியுள்ளார்.

வைரல் வீடியோ:

வைரல் வீடியோ:

வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். எப்படி இந்த பர்ஸை உருவாக்கினீர்கள்? இது விற்பனைக்கு தருவீர்களா என பலரும் டிஜேவை நச்சரித்து வருகின்றனர்.

ரகசியம்:

ரகசியம்:

ஆனால், இந்த பணப்பை விற்பனைக்கு அல்ல என கறாராக கூறிவிட்டார் டிஜே. அதோடு என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்தி இந்த பர்ஸை தான் உருவாக்கினேன் என்ற ரகசியத்தையும் வெளியில் சொல்ல அவர் மறுத்து விட்டார்.

இதுவும் ஒரு மாடல்:

டிஜேவின் இந்த வித்தியாசமான பர்ஸ் பதிவுக்கு கீழே, ஒரு நெட்டிசன் அதை விட பயங்கரமான பர்ஸ் ஒன்றின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வயிறு போன்று உள்ளது. பல்வேறு வண்ணத்தில் பல்வேறு வடிவத்தில் தொப்பையுடன் அந்த பர்ஸ் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+