தன்னம்பிக்’கை’யோடு... கால்களால் விமானம் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த பெண்
வாஷிங்டன்: இரண்டு கைகளையும் இழந்த போதும், தன்னம்பிக்கையோடு கால்களால் விமானம் ஓட்டி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
தன்னம்பிக்'கை' இருக்கும் போது இருகை இல்லாதது பெரிய குறையில்லை என வாழ்ந்து வருகிறார் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32). பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த ஜெசிகா, வளர வளர தன் குறையை நிறையாக்கிக் கொண்டார்.
|
பியானோ முதல்...
முதலில் கால்களை கைகளாக மாற்றி பியோனா வாசிப்பது முதல் செல்போன் இயக்குவது வரை அனைத்துப் பணிகளையும் செய்யப் பழகினார் ஜெசிக்கா.
|
டேக் வாண்டோ...
அதனைத் தொடர்ந்து ‘டேக் வான் டோ' என்ற தற்காப்புக் கலையைப் பயின்ற ஜெசிக்கா, அதில் 2 கருப்பு பட்டைகள் பெற்றார். பின்னர் நீச்சல் கற்றுக் கொண்டு நீச்சல் போட்டிகளில் பரிசுகளை வென்றார்.
|
விமானப் பயிற்சி...
அடுத்து கால்களால் கார் ஓட்டவும் பழகிக் கொண்ட ஜெசிக்கா, விமானம் ஓட்டிப் பழக விரும்பினார். இதற்காக டக்சன் நகரில் உள்ள விமான பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.

சந்தேகம்...
முதலில் கைகள் இல்லாத பெண்ணால் எப்படி விமானம் ஓட்ட முடியும் என அந்நிறுவனத்தார் எண்ணினர். ஆனால், தனது காரை ஜெசிக்கா கால்கள் மூலமே இயக்குகிறார் என்பதை அறிந்ததும், அவருக்கு, விமானம் ஓட்ட பயிற்சி அளிக்க அந்நிறுவனம் முன் வந்தது.

பழைய விமானம்...
தற்போது இருக்கும் விமானங்கள் கால்களால் இயக்க வசதி இல்லாமல் இருந்ததால், முதலில் 1945-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குட்டி விமானத்தை ஜெசிகாவின் பயிற்சிக்கு பயன்படுத்த முடிவு செய்தனர்.
|
பைலட் உரிமம்...
அதன்படி அந்த பழைய குட்டி விமானம் புதுப்பிக்கப்பட்டு ஜெசிகாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்து கடந்த வாரம் அவருக்கு பைலட் உரிமமும் வழங்கப்பட்டது.

கின்னஸ் சாதனை...
இதன் மூலம் கால்களால் விமானத்தை ஓட்டிய உலகின் முதல் பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார் ஜெசிக்கா.
|
தன்னம்பிக்கை...
இது தவிர தனது கணவர் பாட்ரிக்குடன் சேர்ந்து தன்னைப் போலவே உடல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் சேவையையும் ஜெசிக்கா செய்து வருகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications