துபாயில் கருணாநிதிக்கு நினைவேந்தல்! அமீரக திமுக விடுத்த அழைப்பு! திரண்டு வந்த தமிழர்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமீரக திமுக சார்பில் துபாயில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

துபாயில் உள்ள நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்ற கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமீரக திமுக அமைப்பாளரும், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் தலைமை தாங்கினார்.

Remembering Karunanidhi in Dubai! UAE DMKs call! The gathered Tamils!

மேலும், அந்த நிகழ்வில் பேசிய அவர், அயலகத் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு அயலகத் தமிழர் நல வாரியம் அமைத்த ஆட்சி திமுக ஆட்சி என்றும் கருணாநிதியை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சமூக செயல்பாட்டாளரும், எழுத்தாளரும், கவிஞருமான ஆசிப் மீரான் கருணாநிதியின் எழுத்தாற்றல், படைப்புகள் பற்றி சிலாகித்தார். அதேபோல் கருணாநிதியின் வசனங்களையும் குறிப்பிட்டு அவருக்கு நிகராக யாருமில்லை எனக் குறிப்பிட்டார்.

Remembering Karunanidhi in Dubai! UAE DMKs call! The gathered Tamils!

இதனிடையே இந்நிகழ்ச்சியில் அமீரக திமுக நிர்வாகிகள் பிளாக் துளிப் செந்தில், அழகேசன், இன்ஜினியர் பாலா, செந்தில் பிரபு, இளமுருகன், பருத்தி இக்பால், வி எஃப் எஸ் சீனு, அகமது கபீர், பாண்டியன், மேலப்பாளையம் ஃபரீத், சையத் அலி, உம்மல் கேன் ஜாபர் , காயல்பட்டினம் அப்துல் காதர், உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் பாலா, வி கே புரம் பாலா, எழுத்தாளர் ஜெசிலா பானு, கான்சிலேட் இஸ்மாயில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அதேபோல் முஸ்லீம் கட்சி சார்பில் காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீது ரஹ்மான், முஸ்லிம் லீக் செயலாளர் பரக்கத் அலி, காமில், கபீர் , மதிமுக இசக்கி துரை, தமுமுக தலைவர் ஹாடி , உள்பட கூட்டணிக் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டு கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+