கிங் ஆப் பாப்... உலகையே தன் நடனத்தால் ஆட்டி வைத்த ஜாக்சனின் 5ம் ஆண்டு நினைவு நாள்!
வாஷிங்டன்: நடன உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சனின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
உலகளவில் இசை மற்றும் நடனத்தால் ரசிகர்களின் மனதில் சிம்மாசம் போட்டு அமர்ந்திருந்தவர் அமெரிக்க பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன்.
பாடகராக மட்டுமின்றி நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் அதிபர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன், 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்தவர்.
இசை சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்குக் காரணம் அளவுக்கதிகமாக வீரியமிக்க மாத்திரைகளை உட்கொண்டது தான் எனக் கூறப்படுகிறது.
அன்னாரது ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தனி இசைக்கச்சேரி...
தொடக்க காலத்தில் தனது சகோதரர்களுடன் இணைந்து இசைக்கச்சேரி நடத்தி வந்த மைக்கேல் ஜாக்சன், 1971ம் ஆண்டு முதல் தனியாக இசைக் கச்சேரி நடத்த ஆரம்பித்தார்.

நடன அசைவுகள்...
தனது தனித்துவமான நடன அசைவுகளால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் மைக்கேல் ஜாக்சன். இவரால் வெளியிடப்பட்ட இசைத் தொகுப்புகள் உலகெங்கும் வசூலை வாரிக் குவித்தது.

கிங் ஆப் பாப்...
உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் மத்தியில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பிரபலமானவராக வாழ்ந்து வரும் மைக்கேல் ஜாக்சனை ரசிகர்கள், ‘கிங் ஆப் பாப்' என்றே குறிப்பிடுகின்றனர்.

பாப்...
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' என்ற புதிய நடனம் மூலம் பிரபலமானார் மைக்கேல் ஜாக்சன்.

புதிய காலணி...
புவி ஈர்ப்பு விசையை மீறி நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் காலணி ஒன்றைத் தானே உருவாக்கினார் .அதன் பேடன்ட்டை பதிவும் செய்து கொண்டார். இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால். இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள்.

கிராமி விருது...
மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982. இந்த வருடம்தான் ஸ்பீல்பெர்கின் ஈடி படத்திற்க்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக கிராமி விருது அவருக்கு கிடைத்தது.

த்ரில்லர்...
அதே வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில்;அதிகமாக விற்கும் இசை ஆல்பம். இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத்தொடங்கியது உலகம், த்ரில்லர் ஆல்பத்திற்காக எட்டு கிராம்மி விருதுகளை ஜாக்சன் அள்ளினார் . இது முப்பது ஆண்டுகளாக அப்படியே உள்ள சாதனை.

பாலியல் குற்றம்...
இசையால் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் மீது கடந்த 1993ம் ஆண்டு குழந்தைகளுடன் பாலியல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப் பட்டது. பின்னர், இந்த குற்றம் பொய்யானதே என்று நிரூபிக்கப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து, இவர் மேற்கொண்ட பல்வேறு பிரச்சனைகளால் பத்தாண்டுகளுக்கும் மேலாக இசைக்கச்சேரிகளிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

மறைந்தார்...
பின்னர், மீண்டும் திரும்பி வந்து இசை நிகழ்ச்சி நடத்தியபோதும் மக்கள் மத்தியில் இவருக்கான மதிப்பு குறையவேயில்லை. புதிய இசை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில், கடந்த 2009ம் ஆண்டு பூவுலகை விட்டு அவரது உயிர் பிரிந்தது.

நீங்காத நினைவுகள்...
ஆனபோதும், இன்றளவும் அவர் தனது இசையின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்றால் அதனை நிச்சயம் மறுக்க இயலாது. இவர் மறைந்தாலும், இவரால் உருவாக்கப்பட்ட நடனங்கள் இன்று வரை ஆங்காங்கே அரங்கேறி அவரது பெயரை உரக்கக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றன.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications