அமெரிக்காவில் உருவானது இந்து குடியரசு கூட்டணி.. யூதர்களை போல செல்வாக்குபெற உறுதி
வாஷிங்டன்: யூதர்களை போலவே, அமெரிக்காவில் சக்திமிக்க குழுவாக உருவாகும் நோக்கத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்கள், 'இந்து குடியரசு கூட்டணி' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பை உருவாக்கியவர் சலாப் ஷாலி குமார். சமீபத்தில் நடைபெற்ற அமைப்பின் தொடக்க விழாவில் பேசிய குமார் "குடியரசு யூத கூட்டணியின் செயல்பாடுகளை பார்த்த பிறகு, அமெரிக்க இந்துக்கள் அமைப்பை உருவாக்கும் ஆர்வம் வந்தது. அமெரிக்காவில் யூத கூட்டணி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதில், திறம்பட செயல்படுகிறது. இதுதான், இந்து அமைப்பை தொடங்குவதற்கான நோக்கம்.

பொது கருத்து அடிப்படையில், அமெரிக்க இந்து கூட்டணி செயல்படும். அமெரிக்கா மட்டுமின்றி, இந்தியாவிலும் உருவாக்கப்படும், கொள்கை முடிவுகளில், இந்த கூட்டணியின் அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது" என்று குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
"இந்திய பொருளாதாரம் உலகின் வேறு எந்த நாடுகளைவிடவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ரீதியாகவும் நெருங்கிவருவதற்கு இந்த கூட்டணி உதவும். மோடி அரசுக்கு மக்கள் அளித்த வாக்குகளை வைத்து பார்க்கும்போது, இந்தியா சுதந்திரமான, ஆக்கப்பூர்வமான அரசை எதிர்பார்த்துள்ளது தெளிவாகிறது" என்றும் குமார் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் பெயர் இந்து என்று இருப்பினும், கிறிஸ்தவர் உள்ளிட்ட பிற மதத்தவர்களும். இதில் உறுப்பினர்களாக உள்ளனர். தொடக்க விழா நிகழ்ச்சியில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜார்ஜ் ஹோல்டிங் பங்கேற்றது சிறப்பு.
அமெரிக்காவில் யூதர்கள் செல்வாக்குமிக்கவர்களாக இருப்பதும், அமெரிக்க கொள்கை நிலைப்பாட்டில் அவர்கள் கொடுக்கும் நெருக்கடி முக்கிய பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications