இலங்கையின் போர்க்குற்றங்கள்.. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக ஏற்பு!
ஜெனீவா: ஐ.நா. மனித உரிமைகள் அவையில், இலங்கை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா இந்த விவகாரத்தில் முதல் முறையாக இன்று வாய் திறந்தது.
இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான இலங்கை அரசின் பதிலும், இன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. சீனா, தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும், அமெரிக்க தீர்மானத்தின் மீது கருத்துகளை தெரிவித்தன.
ஆனால், அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோர எந்த நாடும் தயாராக இல்லை. எனவே, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது.
அமெரிக்காவின் திருத்தப்பட்ட தீர்மானத்தில், போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச நாடுகள் மற்றும் காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த நீதிபதிகள் மற்றும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் கூடிய விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இலங்கை மட்டுமே, போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்திக்கொள்ள முடியாது. சர்வதேச சமூகத்தின் பங்களிப்பும் இந்த விசாரணையில் இடம்பெறும்.
தீர்மானம் நிறைவேறிய பிறகு, சபைக்குள் கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி "இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இலங்கை அரசு அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.
தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கூறுகையில், "இதுவரை இலங்கை போர்க்குற்றம் நடந்ததை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது, சர்வதேச சமூகத்தின் முன்பாக, இலங்கை அதை ஒப்புக்கொண்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு முன்னேற்றம். ஆனால், தீர்மானத்தோடு இந்த பிரச்சினை நிற்க கூடாது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications