பிரபல ஹோட்டலின் தந்தூரி அடுப்பில் எலிக்கறி சமைத்த ஊழியர்.. வைரலான வீடியோ.. இழுத்து மூடப்பட்ட கிளைகள்
தந்தூரி அடுப்பில் எலிக்கறி சமைப்பது தொடர்பான வீடியோ வைரலானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளது பிரபல ஹோட்டல் ஒன்று.
Recommended Video

ஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் எலிக்கறி சமைத்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள உணவகம் டெட்டிஸ் பிக்கர் பர்கர். சமீபத்தில் இந்த உணவகம் தொடர்பாக அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று வெளியானது.

அந்த வீடியோவில் ஹவாய் தீவுகளில் உள்ள அந்த உணவகத்தின் ஒரு கிளையின் சமையலறையில், ஊழியர் ஒருவர் எலிக்கறி சமைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது அந்த உணவகனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உணவகனத்தின் வியாபாரத்தையும் முற்றிலும் பாதித்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடினர். மேலும் சமையலறையை சுத்தப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த உணவகத்தின் உரிமையாளர் ரிச்சர்டு ஸ்டுலா, "சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்து நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். 20 வருடங்களுக்கு மேலாக நாங்கள் சம்பாதித்த நற்பெயரை கெடுக்க, முன்னாள் ஊழியர் ஒருவர் செய்த சதி தான் இது", எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுத்தப் பணிகளுக்காக அந்த டெட்டி பிக்கர் பர்கரின் இரண்டு கிளைகள் மூடப்பட்டுள்ளன.
அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகே அந்த இரண்டு கிளைகளும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications