குளியலறையில் சுயநினைவின்றி கிடந்த அமெரிக்க நடிகை: வழக்கில் புதிய திருப்பம்!
நியூயார்க்: குளியல் அறையில் சுயநினைவின்றி நிர்வாண நிலையில் கிடந்த அமெரிக்க நடிகை போதை மருந்து பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ நடிகை பாபி கிறிஸ்டினா பிரவுன். 21 வயதான இவர் கடந்த சனிக்கிழமை காலை தனது வீட்டில் உள்ள குளியலறை தொட்டியில் சுயநினைவின்றி தலை தொங்கிய நிலையில் கிடந்தார்.

நடிகையின் கணவர் நிக் கார்டன், அவரை மீட்டு ஆம்புலன்சில் வடக்கு புல்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
கிறிஸ்டினா மூளை வீக்கம் காரணமாக கோமாவில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து கிரிஸ்டினாவை, ஞாயிறன்று அட்லாண்டா மருத்துவமனைக்கு மாற்றினர். தற்போது அங்கு கிரிஸ்டினாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாயைப் போலவே
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அவரது தாய் விட்னி ஹஸ்டன் இதே போல் ஹில்ஸ் ஹில்டன் ஹோட்டல் குளியலறை தொட்டியில் தலை தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு சில தினங்களுக்கு முன் கிறிஸ்டினாவுக்கு இப்படி நடந்துள்ளது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
போதை பழக்கத்தில்
கிறிஸ்டினாவின் 18 ஆவது பிறந்த நாளின் போது கொக்கைன் உபயோகித்ததாக சர்ச்சை எழுந்தது. அவரது தாயின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு சில தினங்களுக்கு பிறகு மதுவில் போதை மருந்தை கலந்து குடித்ததால் மயங்கி விழுந்தார். அவர் மயக்கமுற்று ஸ்ட்ரெச்சரில் வீட்டுக்கு எடுத்து செல்லப்படும் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
போலீஸ் சோதனை
எனவே, அவர் போதை மருந்து பயன்படுத்தியதால்தான் இப்போது குளியலறை தொட்டியில் விழுந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனால், கிறிஸ்டினாவின் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் எந்த போதைப்பொருளும் இல்லை என்று தெரிவித்தனர்.
போதை குற்றவாளி
இந்நிலையில், காவல்துறை பதிவேட்டின் படி கிறிஸ்டினாவை அவரது கணவர் நிக் கார்டன் மருத்துவமனைக்கு அனுப்பிய போது, அவரது நண்பரான மேக்ஸ்வெல் லோமாஸ் அவருடன் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி போதை மருந்து குற்றத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 15000 டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதும் காவல் துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கிறிஸ்டினா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவரிடம் இது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications