பெற்றோர்களே.. சினிமா நடிகர்களை விடுங்கள்... இவர்தான் ரியல் ஹீரோ... குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்
தாய் குகையில் மீட்பு படையினரை ஒருங்கிணைத்து சாதனை படைத்தவர் ரிச்சர்ட் ஹாரிஸ்.
Recommended Video

பாங்காங்: தாய் குகையில் மீட்பு படையினரை ஒருங்கிணைத்து அனைத்து மாணவர்களையும் மீட்ட ஹீரோ என்றால் அவர் ரிச்சர்ட் ஹாரிஸ் ஆவார்.
தாய்லாந்தில் சியாங்ராய் மாகாணத்தில் உள்ளது தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இங்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்காக கால்பந்து அணியை சேர்ந்த 12 மாணவர்களும், ஒரு பயிற்சியாளரும் கடந்த ஜூன் 23-ஆம் தேதி சென்றனர்.
இவர்கள் பிறந்தநாள் கொண்டாடி விட்டு திரும்பும் போது கனமழை பெய்தது. இதனால் குகைக்குள் தண்ணீர் தேங்கிவிட்டது. எனவே அவர்களால் வெளியேற முடியாமல் தவித்தனர்.

பிரிட்டிஷ் குகை மீட்பு
இந்த குகையோ 10 கி.மீ. நீளம் கொண்டது ஆகும். இதனால் இவர்கள் உணவு, நீர் இன்றி குகையிலேயே தவித்தனர். இதை அறிந்த தாய்லாந்து மீட்பு படையினர் இவர்களை காப்பாற்ற திட்டம் வகுத்தனர். அதன் படி , பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் குகையில் சிக்கிய 13 பேரையும் 4 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டறிந்தனர்.
|
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
இதையடுத்து தாய்லாந்து கடற்படையில் தேர்ச்சி பெற்ற ஸ்கூபா டைவ் வீரர்கள் பலமுறை ஒத்திகை பார்த்தனர். பின்னர் சிறுவர்களை மீட்பதற்காக ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் சிறிய நீர் மூழ்கி கப்பலை வடிவமைத்தது.

சிறுவர்கள் மீட்பு
அதை கொண்டு ஆக்ஸிஜன் நிரப்பி கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் நேற்று வரை அனைவரும் மீட்கப்பட்டனர். மிகவும் குறுகிய குகையில் சேறு கலந்து நீரில் ஆக்ஸிஜன் உருளையுடன் அவர்கள் பயணித்து சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
|
மீட்பு பணி
தாய்லாந்து வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சிறுவர்களை மீட்ட படையினரை மக்கள் பாராட்டினர். இந்த சாகச மீட்பு பணியை ஒருங்கிணைத்தவர் ரிச்சர்ட் ஹாரிஸ். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மயக்க மருந்து நிபுணர், ஏரோ மருத்துவ ஆலோசகர், குகை டைவிங் நிபுணர் என்ற பன்முகம் கொண்டவர். இவருக்கு இதில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இவரது புகைப்படமும் வகுத்த திட்டமும் வைரலாகி வருகிறது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு ஹீரோ என்றால் என்ன என்று கேட்டால் இவரை பற்றி சொல்லி கொடுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications