ரியோ ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது : வண்ணமயமான வான வேடிக்கை
ரியோ டி ஜெனிரோ : உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் கோலகலமாக தொடங்கியது. மரக்கானா கால்பந்து மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிவிளக்கு நடனங்கள், வண்ணமயமான வான வேடிக்கைகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் தொடக்க விழா கால்பந்து மைதானமான மரக்கானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இது இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியாகும்.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்த விழாவில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.
ஐ,நா. சபை தலைவர் பான் கீ மூன் உட்பட உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டுரசித்தனர்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஒலிம்பிக் பிறந்த கிரீஸ் நாட்டு வீரர்கள் முதலில் கொடி அணிவகுப்பு நடத்தினர். போர்ச்சுக்கள் மொழி அகர வரிசைப்படி கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இப்பட்டியலில் இந்தியா 95வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக்கில் முதல் முறையாக 10 பேர் கொண்ட அகதிகள் அணி கலந்து கொள்கின்றனர். போட்டியை நடத்தும் பிரேசில் அணிவகுப்பில் கடைசியாக அணிவகுப்பில் இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்பாக அகதிகள் அணி அணிவகுத்து சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications