ச்சே.. கொள்ளையர்களுக்கே உரிய கெத்தை கெடுத்திட்டீங்களேய்யா.. அப்பிரண்டீஸ்களா!
கடைக்குள் கொள்ளையடிக்க வந்த திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
பிரஸ்ஸல்ஸ்: கொள்ளைக்காரங்கன்னா ஒரு கெத்து வேணாமா?.. இப்படியா அப்பிராணியா இருக்கிறது?
பெல்ஜியத்தின் இ-சிகரெட் ஷாப் ஒன்று இருக்கிறது. இந்த கடைக்குள் 6 கொள்ளைக்காரர்கள் திடீரென புகுந்து எல்லா பணத்தையும் எடு என்றார்கள். இதனால் கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். 6 பேராக வந்துவிட்டதால் அவரால் எதையுமே செய்ய முடியவில்லை. ஆனால் கடையிலுள்ள பணத்தை எப்படியாவது காப்பாற்றியே ஆகணும் என்று நினைத்தார்.

நாளைக்கு வர்றீங்களா?
அதனால் கொள்ளைக்காரர்களிடம், "இப்போ கடையிலே ஒன்னுமே இல்லையே.. இப்போ போய் வந்திருக்கீங்க. பணம் நிறைய இருக்கும்போது கொள்ளை அடிச்சாதானே உங்களுக்கும் சவுகரியமா இருக்கும். அதனால நாளைக்கு சாயங்காலம் வந்தீங்கன்னா, பணமும் நிறைய இருக்கும். உங்களுக்கும் ஈசியா இருக்கும்" என்றார். இதை கேட்டதும் கொள்ளைக்காரர்களும் கடையும், கடைக்காரரையும் எதுவுமே செய்யாமல் அமைதியாக கிளம்பி வந்துவிட்டனர்.
[செவ்வாய்க்கிழமை ராத்திரி கெஸ்ட் ஹவுஸில் மீட் பண்ணலாம்.. ஆசை ஆசையாய் போய் பார்த்தால்! ]

கடைக்காரருக்கு ஷாக்
மறுநாள் சாயங்காலம், இந்த நேரத்தில் போனால்தான் பணம் இருக்கும் என்று கடைக்காரர் சொன்னாரே என்று நினைத்து 6 கொள்ளையர்களும் மீண்டும் அதே கடைக்கு போனார்கள். நம் பேச்சை நம்பி இப்படி 6 பேரும் திரும்பி வந்து நிற்பதை பார்த்ததும் கடைக்காரருக்கு ஷாக் ஆகி விட்டது. ஆனால் அடுத்த வினாடியே தங்களை போலீசார் ரவுண்ட் அப் பண்ணியதும், கொள்ளையர்களுக்கு அதற்கு மேல் ஷாக் ஆகிவிட்டது.

சுற்றி வளைத்தனர்
இவர்கள் இப்படி திரும்பவும் வருவார்கள் என்று ஏற்கனவே கடைகாரர் போலீசுக்கு தகவல் தந்திருந்தார். ஆனால் அதை போலீஸ்தான் நம்பவே இல்லை. எந்த கொள்ளையர்களாவது கடைக்காரர் பேச்சை நம்பி வருவார்களா? என்று போலீசார் நினைத்தனர். ஆனாலும் தெரிந்தும் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்று கடைக்கு பின்னாடியே ஒளிந்திருந்து, 6 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
ஷார்ப் டைம்
கடைக்காரர் சொன்ன டைமுக்கு ஷார்ப்பாக கொள்ளையர்கள் கடைக்குள் வந்து நின்றதும், அவர்களை போலீசார் கைது செய்ததும் வீடியோவாக வைரலாகி வருகிறது. கொள்ளையர்கள் லேசா இருக்கலாம்.. ஆனால் இப்படியாப்பா லூசா இருப்பது.. போய் நல்லா டிரெய்னிங் எடுத்து வாங்க போங்க.. போங்க!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications