இறுகும் பிடி.. சோனியா மருமகன் ராபர்ட் வதேராவிடம் 3வது நாளாக விசாரணை.. மனைவி பிரியங்கா செய்த செயல்
டெல்லி: ஹரியானா மாநிலம் குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வதேரா 3 வது நாளாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலக விசாரணைக்கு ஆஜரானார். அவரை பிரியங்கா காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் வரை வந்து தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. பிரியங்கா காந்தியின் கணவரான இவர் மீது மோசடி வழக்கு உள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் குருகிராம் நிலமோசடி தொடர்பான பணமோசடி வழக்கு ராபர்ட் வதேராவுக்கு எதிராக உள்ளது.

தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் நிறுவனம் ஷிகோபுரில் கடந்த 2008, பிப்ரவரியில் ஒம்காரேஷ்வர் பிராப்பர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட்டில் ரூ. 7.5 கோடிக்கு வாங்கியது. பின்பு அந்த நிலம் டிஎல்எஃப்-க்கு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கையே அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் பணமோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கருதுகிறது.
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ராபர்ட் வதேரா நேற்று முன்தினம் முதல் நாள் ஆஜரானார். அதன்பிறகு நேற்று 2வது நாளாக ஆஜரானார். அவரிடம் 2 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மொத்தம் 10 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
இதையடுது்து 3வது நாள் விசாரணைக்கு இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அவருடன் மனைவி பிரியங்கா காந்தியுடன் வந்திருந்தார். நேற்றைய தினம் 2வது நாள் விசாரணையின்போது பிரியங்கா காந்தி ராபர்ட் வதேராவை கட்டியணைத்து அன்பை பரிமாறி அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தார்.
அதேபோல் இன்றைய தினம் ராபர்ட் வதேராவுடன் வந்த பிரியங்கா காந்தி அவரது தோளில் தட்டி தைரியம் கொடுத்தார். அதன்பிறகு தான் ராபர்டர் வதேரா அங்கிருந்தவர்களை நோக்கி கையசைத்து அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். இந்த தொடர் விசாரணை என்பது ராபர்ட் வதேராவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications