பெல்ட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளார் ராபின் வில்லியம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சான் ரஃபேல், கலிபோர்னியா: பிரபல காமெடி நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலைதான் செய்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

அவர் தனது பெல்ட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தடயவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Robin Williams Hanged Himself with Belt, Says Coroner

ஆஸ்கர் விருது பெற்றவரும், மிஸஸ் டவுட்பயர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருமான ராபின் வில்லியம்ஸ், கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்தன.

இந்த நிலையில் அவர் பெல்டடால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. பெல்ட்டால் தூக்குப் போட்டதில் மூச்சுத் திணறியும், தொண்டைக் குழாய் நொறுங்கியும் அவர் மரணத்தைத் தழுவியுள்ளார் என்று தடவியவியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

63 வயதான ராபின் வில்லியம்ஸ், பெல்ட்டை கதவுக்கும், கதவு நிலைக்கும் இடையே கட்டி, தரையில் உட்கார்ந்த நிலையில் தூக்குப் போட்டுள்ளார் என்று மெரீன் கவுன்டி உதவி தலைமை தடயவியல் நிபுணர் கீத் பாய்ட் தெரிவித்துள்ளார்.

வில்லியம்ஸ் உடலை மீட்டபோது அவரது பாக்கெட்டில் ஒரு கத்தி இருந்ததும், அதைக் கொண்டு தனது மணிக்கட்டை அவர் கீறி ரத்தத்தை வர வைத்திருப்பது தெரிய வந்ததாகவும் பாய்ட் தெரிவித்தார்.

மன அழுத்தத்தால் கடுமையா பாதிக்கப்பட்டவர் ராபின் வில்லியம்ஸ். இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் தற்போது மரணத்தைத் தழுவியுள்ளார். ஆனால் தற்கொலைக்கு முன்பு குறிப்பு எதையும் அவர் எழுதி வைக்கவில்லை.

ராபின் வில்லியம்ஸ் உடலை தடயவியல் ஆய்வுக்குப் பின்னர் குடும்பத்தாரிடம் போலீஸ் ஒப்படைத்துள்ளது. விரைவில் இறுதிச் சடங்குகள் குறித்து குடும்பத்தினர் தீர்மானிப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+