டி.வி "காம்பயர்கள்" வயிற்றில் புளியைக் கரைக்கும் "ரோபோ"
பெய்ஜிங்: சீனாவில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று முதன் முறையாக ரோபோவை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி அமர்த்தியுள்ளது மற்ற தொகுப்பாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பிரபலமான டிவி சேனல் சாங்காய் டிராகன் டிவி. இந்த டிவியில் வானிலை அறிவிப்புகள் வழக்கமாக தொகுப்பாளர்களைக் கொண்டு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெண் ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஜியாவோல்ஸ் எனும் ஸ்மார்ட் கிளவுட் மற்றும் பின் டேட்டா சாப்ட்வேரை கொண்டு இயங்குகிறது. அழகான பெண் குரலில் வானிலை அறிவிப்புகளை மனிதர்களை போலவே துல்லியமாக ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கிறது. இது பெரும்பாலான நேயர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி அவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த சாப்ட்வேர் மூலம், ஏற்கனவே எழுத்துக்களை பேச்சு வடிவமாக மாற்றுவது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதில் இருக்கும் யூனிக் எமோஷனல் தொழில்நுட்பம் உடனடியாக எதையும் பேச்சு வடிவில் துல்லியமாக மாற்றக்கூடியது. இவ்வாறு ரோபோக்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டும் . எனவே இது தொகுப்பாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications