மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல....!
கோபி பாலைவனம், மங்கோலியா: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. இது குணா படத்தில் கமல்ஹாசன் பாடி வைத்த பாட்டு. இன்று நிஜமாகியிருக்கிறது.
கொடூரமான விலங்காக கற்பனை செய்யப்படும் டைனோசர்களுக்கும் காதல் இருந்தது என்பதை நிரூபிக்கும் ஒரு அற்புதமான சான்றை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் மங்கோலியாவில் உள்ள கோபி பாலைவன பகுதியில் பூமிக்குள் புதைந்த நிலையில் 2 டைனோசர்களின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இரண்டு டைனோசர்களின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து அல்பெர்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அதாவது, இந்த டைனோசர்கள், இரண்டும் பறவை போல பறக்கக் கூடிய வகை என்று தெரிய வந்தது.
அதாவது ஓவிராப்டோரசர் குடும்பத்தைச் சேர்ந்த காடிப்டிரெக்ஸ் வகையைச் சேர்ந்தவை இவை. இந்த வகை டைனோசர்கள் விலங்குகளையும் சாப்பிடும், தாவர வகைகளையும் சாப்பிடுவனவாகும்.
இவை ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இவை வாழ்ந்திருக்கலாம். இவற்றில் ஒன்று ஆண், மற்றொன்று பெண் ஆகும். இவற்றின் எலும்பு கூடு படிமங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிய நிலையில் இருந்தன.
இரண்டும், செக்ஸில் ஈடுபட்ட போது மண்ணில் புதைந்து அழிந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். பலத்த மழையால் மண் அடித்து வரப்பட்டு அதில் இந்த இரு டைனோசர்களும் மூழ்கிப் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவற்றுக்கு தற்போது ரோமியோ, ஜூலியட் என்று ஆய்வாளர்கள் செல்லமாகப் பெயரிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
