அமெரிக்க பாதுகாப்பை நம்பாமல் பிஸ்டலுடன் திரிந்த மாஜி அதிபர் ரீகன்: ரகசியம் அம்பலம்
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், தனது சூட்கேசில் எப்போதும், பிஸ்டல் வைத்திருந்ததாக அந்த நாட்டு முன்னணி எழுத்தாளர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
அமெரிக்க முன்னணி எழுத்தாளர் பிராட் மெல்ட்சர் இதுகுறித்து கூறியுள்ளதாவது: ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற 69 நாட்களிலேயே, அவருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத தாக்குதலில் அவரது ஊடக செயலாளர் ஜேம்ஸ் பிரெட்டி சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்துக்கு பிறகு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை ரீகன் நம்பவில்லை. 0.38 வகை பிஸ்டலை எப்போதுமே ரீகன் தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். இதை தனது சூட்கேசுக்குள் அவர் வைத்திருப்பார் என்று கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய அதிபர் பராக் ஒபாமா அநேகமாக தன்னுடைய பிளாக் பெர்ரி செல்போனை தன்னுடன் வைத்திருக்க கூடும் என்றும் முத்தாய்ப்பாய் கூறியுள்ளார் அந்த எழுத்தாளர்.












Click it and Unblock the Notifications