பேட்டரி பிரச்சனை: ரோசெட்டாவின் 10 ஆண்டு பயணம் வீணா?
பெர்லின்: வால் நட்சத்திரத்தில் தரையிறங்கிய ஃபிலே லேண்டர் புகைப்படங்கள் எடுத்து அனுப்ப துவங்கியபோதிலும் அதன் பேட்டரி சனிக்கிழமை வரை மட்டுமே நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் கடந்த 2004ம் ஆண்டு 100 கிலோ எடை கொண்ட ஃபிலே லேண்டர் ரோபோ இணைக்கப்பட்ட ரோசெட்டா விண்கலத்தை 67 பி என்ற வால் நட்சத்திரத்திற்கு அனுப்பி வைத்து. அந்த விண்கலம் 10 ஆண்டுகள் பயணம் செய்து புதன்கிழமை வால் நடச்சத்திரத்தை அடைந்தது. அதன் பிறகு ஃபிலே லேண்டர் வால் நட்சத்திரத்தில் தரையிறங்கியது.
ஃபிலே வெற்றிகரமாக தரையிறங்கியபோதும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

பவுன்ஸ்
ஃபிலே வால் நட்சத்திரத்தில் தரையிறங்குகையில் அதில் பட்டு மேலே வந்து மறுபடியும் தரையிறங்கியது. இதில் ஃபிலேவின் மூன்று கால்களில் ஒன்று சேதம் அடைந்துவிட்டது.

புகைப்படம்
ஃபிலே அனுப்பிய புகைப்படத்தை பார்த்தால் அது இருக்கும் இடம் பாறை போன்று உள்ளது. அதிலும் ஃபிலே இருக்கும் இடம் சாய்வான பகுதியின் ஓரம் போன்று உள்ளது.

பேட்டரி
ஃபிலே தனது பேட்டரிகளை சார்ஜ் செய்ய அதன் மீது சூரியஒளி பட வேண்டும். ஆனால் அது தற்போது இருக்கும் இடத்தில் போதிய சூரிய ஒளி படாது.

சனிக்கிழமை
ஃபிலே ரோசெட்டாவில் இருந்து பிரிந்தபோது அதன் பேட்டரியில் இருந்த சார்ஜ் 60 மணிநேரத்திற்கும் சற்று அதிகமாக நீடிக்கும். எனவே தற்போதைய நிலையில் சனிக்கிழமைக்கு மேல் ஃபிலே செயல்படுவது கடினம்.

என்ஜினியர்கள்
ஃபிலேவை சூரிய ஒளி நன்கு படும் இடத்திற்கு மாற்ற முயற்சி செய்யலாம் ஆனால் அதை திட்டமிட்டு செயல்படுத்த போதிய நேரம் இல்லை.

தகவல்
ஃபிலேவின் பேட்டரி தீர்ந்துவிடும் முன்பு அதன் மூலம் வால் நடச்சத்திரத்தை பற்றி எவ்வளவு தகவல் பெற முடியுமோ அவ்வளவு தகவல் பெற முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications