இங்கிலாந்து இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டனுக்கு இன்று இரண்டாவது பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
கேத் மிடில்டனுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் இன்று தென்பட்டதையடுத்து, உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 6 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராணி எலிசபெத் குடும்பத்தின் ஆஸ்தான மகப்பேறு மருத்துவரான கை தார்ப்பே பீஸ்டன் தலைமையிலான டாக்டர்கள் குழு கேத் மிடில்டனுக்கு பிரசவம் பார்த்தனர். காலை 11 மணியளவில் பெண் குழந்தை பிறந்த்து என்று கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கேத் மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பமு பற்றி மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவானது. ஏற்கனவே, ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கும் கேத் மிடில்டனுக்கு தற்போது இரண்டாவது பிரசவத்தில் இன்று முற்பகலில் அழகான பெண் குழந்தை பிறந்தது. குட்டி இளவரசி பிறந்ததை லண்டன்வாசிகள் கொண்டாடினர்.
கடந்த 182 ஆண்டுகளாக இங்கிலாந்து மன்னர் வம்சத்தில் நேரடி பெண் வாரிசு பிறக்கவில்லை. இரண்டாம் தலைமுறை வாரிசு என்ற வகையிலும் கூட 65 ஆண்டுகளுக்கு முன்னர் இளவரசி அன்னி பிறந்த பின்னர், கடந்த 25 ஆண்டுகளாக இதுவரை வேறு பெண் குழந்தை அரச வம்சத்தில் பிறக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 182 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து மன்னர் வம்சத்தில் நேரடி பெண் வாரிசு தற்போது பிறந்திருக்கிறது. புதிதாக பிறந்த குழந்தை 8 பவுண்ட் 3 அவுன்ஸ் எடை உள்ளதாகவும், குழந்தைக்கான பெயர் விரைவில் சூட்டப்படும் என்றும் அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வில்லியம் - கேட் தம்பதிக்கு ஏற்கனவே 1 வயதில் இளவரசர் ஜார்ஜ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications