ரூ.44,67,90,66,84,800 நாசம்! நடுத்தெருவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர்கள்.. கபளீகரம் செய்த கலிபோர்னியா தீ
கலிபோர்னியா: அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ள காட்டுத்தீ தெற்கு கலிபோர்னியாவை கபளீகரம் செய்து வருகிறது. மூன்றாவது நாளாக அங்கே காட்டுத்தீ பரவிக்கொண்டு இருக்கிறது. அங்கே மொத்தமாக 5 விதமாக காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. பாலிசேட்ஸ், ஈடன், ஹர்ஸ்ட், லிடியா மற்றும் சன்செட் ஃபயர்ஸ் ஆகிய காட்டு தீ அங்கே ஏற்பட்டு உள்ளது.
பாலிசேட்ஸ் தீ: பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும்., லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது.

ஈட்டன் ஃபயர்: கலிபோர்னியாவின் தெற்கு பகுதிகளில் உள்ள ஈட்டன் Canyon அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும்
ஹர்ஸ்ட் ஃபயர்: ஹர்ஸ்ட் பகுதியில் அல்லது அதற்கு அருகிலுள்ள இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும்.
லிடியா ஃபயர்: லிடியா பகுதியில் அல்லது அதற்கு அருகிலுள்ள இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும்.
சன்செட் ஃபயர்: Sunset Boulevard அல்லது Sunset Ridge பகுதியில் அல்லது அதற்கு அருகிலுள்ள இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும்.
பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ:
இந்த காட்டுத்தீ காரணமாக 29,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஏற்கனவே கருகிவிட்டன, மேலும் 2,93,000 குடியிருப்பாளர்கள் வெளியேறி உள்ளனர்.
வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தீ நாசமாக்கி உள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் கருகி உள்ளன. 5 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
கிட்டத்தட்ட அங்கே 4 லட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக பாலிசேட்ஸ் தீ அதாவது பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மிக மோசமாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அங்கேதான் அதிக அளவில் ஹாலிவுட் பிரபலங்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
அங்கேதான் தற்போது காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அங்கே இருந்த பிரபலங்கள் வீடுகள் எல்லாம் நாசமாகிவிட்டதால் அவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். அமெரிக்காவில் காட்டுத் தீ அதிகம் ஏற்படும் பகுதிகளில் கலிபோர்னியா மாகாணம் முக்கிய இடத்தில் இருக்கிறது. கடந்த ஒருவருடம் மட்டுமே கலிபோர்னியாவில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட காட்டுத் தீக்கள் ஏற்பட்டது. ஒரே மாதத்தில் கலிபோர்னியாவில் இங்கே 2-3 முறை தீ ஏற்படுவது வழக்கம்.
இந்த முறை காட்டுத் தீயை அணைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியையும் இந்த தீ கைப்பற்றிவிட்டது. 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 750 கோடிக்கும் அதிகமாக இதனால் செலவு ஆகி உள்ளது.
பாரிஸ் ஹில்டன், பில்லி கிரிஸ்டல் மற்றும் அந்தோனி ஹாப்கின்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பலரும் எரிந்த தங்கள் வீடுகளின் காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications