"தனி லிஸ்ட் ரெடி!" ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த 17 நாடுகள்.. குறி வைக்கும் புதின்? பரபர தகவல்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை சமயத்தில், ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த நாடுகள் குறித்த பட்டியலை அந்நாட்டு அரசு தயார் செய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2ஆவது வாரமாகத் தொடர்கிறது. இதுவரை போரை நிறுத்த 3 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், இதுவரை அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனால் இரு நாட்டு ராணுவங்களுக்கு மட்டுமின்றி, உக்ரைன் மக்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். போர் தொடர்வதால், உக்ரைனில் இருக்கும் அப்பாவி மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள்
இந்த ஆண்டு தொடக்கம் முதலே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருவது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இப்படி முழு வீச்சில் புதின் போரைத் தொடங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த போர் நடவடிக்கையை உலக நாடுகள் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளன. மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகள் ரஷ்யா மீது உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. ஈராக், வடகொரிய நாடுகளுக்கு அடுத்து அதிக பொருளாதாரத் தடைகளை எதிர் கொண்டிருக்கும் நாடாக ரஷ்யா உள்ளது.

பொருளாதார தடைகள்
இந்தப் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதிப்பது தொடர்பாக உலக நாடுகள் ஆலோசித்து வருவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இது ரஷ்யாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் ரஷ்யா மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

பட்டியல் ரெடி
இந்நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை சமயத்தில் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த நாடுகள் பட்டியலை ரஷ்யா தயார் செய்து வருவதாகத் தகவல் வெளியானது. மொத்தம் 17 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலுக்கு ரஷ்ய அதிபர் புதின் திங்கட்கிழமை ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.

கடும் நடவடிக்கை
மேலும், ஐரோப்பிய ஒன்றியம், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாடுகளும் ரஷ்யாவின் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உலக நாடுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது அறிவித்துள்ளன. ரஷ்ய அதிபர் புதின் உடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் 8 முக்கிய நிறுவனங்கள், ரஷ்யாவின் 2 முக்கிய வங்கிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளன. பிரிட்டனைப் பொருத்தவரை 15 ரஷ்யத் தொழிலதிபர்கள், 205 ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடையை அறிவித்துள்ளது.

இந்தியா உள்ளதா
ரஷ்யா தயார் செய்துள்ள இந்தப் பட்டியலில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெறவில்லை. முன்னதாக ரஷ்யப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கும் நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராகப் போர் தொடுத்ததாகவே கருதப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில் ரஷ்யா இப்படி தனக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்த நாடுகள் பட்டியலைத் தயார் செய்வது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Recommended Video

அமைதி பேச்சுவார்த்தை
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக இதுவரை இரு நாடுகளுக்கு இடையே 3 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், போர் 12ஆவது நாளாகத் தொடர்கிறது. இந்தச் சூழலில், வரும் வியாழக்கிழமை இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் துருக்கி நாட்டில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications