வரியால் மிரட்டும் டிரம்ப்.. நீங்க நினைச்சது நடக்குற காலம் இது இல்லை.. அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி
வாஷிங்டன்: உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த மறுக்கும் ரஷ்யாவை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது. அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களையும் ரஷ்யாவை நோக்கி நகர்த்த டிரம்ப் உத்தரவிட்டு இருப்பது கூடுதல் பரபரப்பை கிளப்பியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை விமர்சித்து வரும் டிரம்ப், அந்த நாடுகளின் மீதும் கூடுதல் வரி விதிக்கப்போவதாக கூறி வருகிறார். டிரம்பின் இந்த பேச்சுகளுக்கு ரஷ்யா தற்போது எதிர்வினையாற்றியுள்ளது. பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு உறுதுணையாக உள்ளது என்ற ரீதியில் ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்து வரும் நிலையில், ரஷ்யாவை பொருளாதார ரீதியிலாக முடக்கும் வகையில் அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்தால் அந்த நாடுகள் மீதும் கடுமையாக வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்த நிலையில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரிக்க போவதாக மிரட்டி வருகிறார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்ற கவலை இந்தியாவுக்கு இல்லை எனவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என்று நேற்றும் எச்சரித்து இருந்தார்.
ரஷ்யாவுடன் பொருளாதார ரீதியிலான உறவு வைத்துள்ள நாடுகள் மீது அதிக வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து வரும் நிலையில், இது தொடர்பாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் காலனித்துவ கொள்கையை குளோபல் சவுத் நாடுகளுக்கு எதிராக பின்பற்றுவதாகவும், தனது மேலாதிக்க நிலைப்பாட்டை காட்ட முயற்சிக்கிறது.
அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
வரலாற்றின் இயற்கையான போக்கை எவ்வளவு வரி போட்டாலும் மாற்ற முடியாது. சர்வதேச அளவில் தனித்தன்மையை பின்பற்றும் நாடுகள் மீது அரசியல் காரணத்திற்காக பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா கொடுக்கிறது. உண்மையான குழு மற்றும் சமமான வரிசை கொண்ட ஒத்துழைப்பை மேம்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது.
தடைகள் மற்றும் கட்டுபாடுகள் விதிப்பது இன்றைய வரலாற்று சூழலில் ஒட்டு மொத்த உலகையும் பாதிக்கிறது என்பது வருந்தத் தக்க உண்மை. வளர்ந்து வரும் உலக ஒழுங்கில் மேலாதிக்கம் இழந்து போகிறது என்பதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், சர்வதேச அளவில் தனித்துவத்துடன் செயல்பட விரும்பும் நாடுகள் மீது அரசியல் ரீதியாக பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தி காலனித்துவ அஜெண்டாவை அமெரிக்கா தொடர்ந்து பின்பற்றுகிறது.
பிரிக்ஸ் ஆதரவுடன் உள்ளோம்
குளோபல் சவுத்தில் உள்ள ரஷ்யாவின் கூட்டாளி நாடுகள் மீது டிரம்ப் விதிக்கும் வரி விதிப்பு அந்த நாட்டின் இறையாண்மை மீதான நேரடி ஆக்கிரமிப்பு ஆகும். அவர்களின் உள்விவகாரங்களில் தலையிடும் முயற்சியாகவே இதனை பார்க்கிறோம். பிரிக்ஸ் மற்றும் குளோபல் சவுத் போன்ற ஒருமித்த எண்ணங்கள் கொண்ட நாடுகள் ஆதரவுடன் நாங்கள் இருப்பதால் வரி விதிப்பு, தடைகளால் இயற்கையான போக்கை தடுத்து நிறுத்த முடியாது. சட்ட விரோதமான ஒருதலைபட்சமான தடைகளை எதிர்த்து நிற்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications