Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ரைன் போரே இன்னும் முடியல.. அதற்குள் ஜப்பானை சீண்டும் ரஷ்யா! சர்ச்சை பகுதியில் போர் பயிற்சி

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் போரே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்து ஜப்பானைச் சீண்டும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது.

கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரில் உள்ள முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

புதினின் இந்த போர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேபோல ரஷ்யா மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் உலக நாடுகள் அறிவித்து வருகின்றன.

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

இருந்தாலும் கூட போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்த போர் காரணமாக இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் உக்ரைன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த போர் மேலும் தொடரும்பட்சத்தில் அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போரை முடிவுக்குக் கொண்டு வர போலந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன,

 குரில் தீவுகள்

குரில் தீவுகள்

உக்ரைன் போரே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யா அடுத்து ஜப்பனை சீண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் உரிமை கோரும் தீவுகளில் ஒன்றான குரில் தீவுகளில் ரஷ்யா தனது ராணுவ பயிற்சிகளை நடத்தி வருவதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன. இந்த தீவு தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதற்கிடையே உக்ரைன் விவகாரத்தில் ஜப்பான் பொருளாதாரத் தடைகளை அறிவித்த நிலையில், பேச்சுவார்த்தையை ரஷ்யா நிறுத்தியது.

 போர்ப் பயிற்சி

போர்ப் பயிற்சி

இந்த குரில் தீவுகளில் 3,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அதிநவீன ராணுவ ஆயுதங்களுடன் பயிற்சிகளை நடத்தி வருவதாக ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஜப்பானுக்கு கடும் ஆத்திரத்தைக் கிளப்பும் வகையில் உள்ளது. ஜப்பான் அரசு இந்த ராணுவ பயிற்சி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 ஜப்பான் குற்றச்சாட்டு

ஜப்பான் குற்றச்சாட்டு


இந்தச் சர்ச்சைக்குரிய தீவுகள் 4 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது. ரஷ்யா இந்த தீவுக்கூட்டங்களை தனது குரில் தீவுகளின் ஒரு பகுயிகா குறிப்பிடுகிறது. அதேநேரம் ஜப்பான் இந்தத் தீவுகளை அதன் வடக்குப் பகுதிகளில் ஒன்றாகவே அழைக்கிறது. இந்தத் தீவுகள் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்ததாகவும் 2ஆம் உலகப் போருக்குப் பின்னரே ரஷ்யா இந்தத் தீவுகளைக் கூட்டத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக ஜப்பான் குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

 பொருளாதாரத் தடைகள்

பொருளாதாரத் தடைகள்

இருப்பினும், உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யா மீது ஜப்பான் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, ஜப்பான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது. இதற்கு ஜப்பான் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்த நிலையில் தான், இப்போது கிரில் தீவுகளில் ரஷ்யா தனது ராணுவ பயிற்சியை நடத்தி உள்ளது. உக்ரைன் உடன் போர் தொடங்கும் முன்னரும், எல்லையில் ரஷ்யா இதேபோன்ற போர்ப் பயிற்சிகளை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

 போர் பயிற்சி

போர் பயிற்சி

ரஷ்யாவின் இந்த ராணுவ பயிற்சியில் பாதுகாப்பு விமானங்களை அழித்தல், நீர்மூழ்கிக் கப்பலை வீழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகள் இருந்தன. இது தவிர, வான்வழித் தாக்குதலைத் தடுத்து அழிக்கும் பயிற்சிகளையும் ரஷ்யா மேற்கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் இதுபோன்ற அதிநவீன போர்ப் பயிற்சிகளை ரஷ்யா மேற்கொண்டுள்ளது கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம் இது தொடர்பாக ரஷ்யா சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+