நவீன ராக்கெட்டுகள், மீண்டும் புரான் விண்கலம்: அமெரிக்காவுடன் போட்டிக்கு தயாராகும் ரஷ்யா
மாஸ்கோ: உக்ரைன் உள்ளிட்ட அண்டை நாட்டு விவகாரங்களுடன் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ரஷியா மீண்டும் விண்வெளித் துறையில் கோலோச்சுவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டு வருகிறது.
உலகின் முதலாவது விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டது ரஷியா. கடந்த 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி ரஷியாவின் யூரிககாரின், விண்வெளி ஓடத்தில் பயணம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் விண்வெளிப் பயணத்தில் குதித்தது.
முதல் முதலாக அமெரிக்க 1983 ஆம் ஆண்டு சேலன்சர் என்ற விண்வெளி ஓடத்தை ஏவியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா 5 விண்வெளி ஓடங்களை தயாரித்து பயன்படுத்தி வந்தது. கடைசியாக அமெரிக்காவின் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் தரையிறக்கப்பட்டு அது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா
தற்போதும் அமெரிக்கா, ரஷியாவின் விண்வெளி ஓடத்தையே விண்வெளிப்பயணத்துக்கு பயன்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் சோயஸ் ராக்கெட்டுக்கள் மூலமாகவே அமெரிக்காவின் விண்வெளிப் பயணங்கள் நடைபெறுகின்றன.

வெடித்த புரோட்டான் ராக்கெட்
இந்த நிலையில் அண்மைக்காலமாக ரஷியாவின் விண்வெளி முயற்சிகள் தேக்கமடைந்த நிலையில் இருக்கின்றன. ரஷியா விண்ணில் செலுத்திய புரோட்டான் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் என்ஜின் பழுதானதால் வெடித்து சிதறியது.

முழுவீச்சில்..
இதைத் தொடர்ந்து ரஷியாவின் ரஷியாவின் மத்திய விண்வெளி மையமான ரஸ்காஸ்மாஸ், முழு வீச்சில் அந்நாட்டின் விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்து செல்ல முடிவு செய்துள்ளது.

அடுத்த திட்டம் என்ன?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ரஸ்காமாஸ் நிறுவன தலைமை அதிகாரி ஒலெக் ஒஸ்டபென்கோ, தற்போது அனைத்து நாடுகளுமே விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா, சீனாவும் இந்த பயணத்தில் ஈடுபட்டு உள்ளன.
இதேபோல் ரஷியாவும் தமது விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்து செல்ல இருக்கிறது. சூப்பர் ஹெவி ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது குறித்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆலோசனை நடத்த உள்ளோம்.
தொடக்கத்தில் 25 டன் எடையுள்ள ராக்கெட்டுகளில் இருந்து 190 டன் எடையுள்ள ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது குறித்து ஆலோசிக்க இருக்கிறோம் என்றார்.

வலுவான பொருளாதாரமே.
ரஷியாவைப் பொறுத்தவரையில் அளப்பரிய எரிவாயு பொக்கிஷத்தால் பொருளாதார நிலைமை வலுவாக இருக்கிறது. அதனாலேயே மீண்டும் 'மோதல்' அரசியல் அரசிங்கில் ரஷியா தலைகாட்ட தொடங்கியிருப்பதுடன் விண்வெளி பயணங்களிலும் தம்மை முன்னிலைப்படுத்த முனைகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications