ரஷ்யா: வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயில் 37 பேர் பலி
ரஷ்யாவின் சைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 37 பேர் பலியாகி உள்ளனர்.
குறைந்தது 64 பேரை காணவில்லை என்றும் அதில் 41 பேர், 2 முதல் 17 வயதுடைய குழந்தைகள் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வின்டர் செர்ரி கட்டட வளாகத்தின் மேல் மாடியில் இந்த விபத்து ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்ட பலரும் அங்குள்ள திரையரங்கில் இருந்துள்ளனர்.
தீயிலிருந்து தப்பிக்க மக்கள் ஜன்னலில் இருந்து குதிப்பது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதியப்பட்டுள்ளன.
நிலக்கரி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் கெம்ரொவா நகரம் மாஸ்கோவின் கிழக்கிலிருந்து சுமார் 3,600கிமீ தூரத்தில் உள்ளது.
இந்த தீ விபத்து குறித்த காரணங்கள் ஏதும் தெரியவில்லை; அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இரண்டு திரையரங்குகளின் கூரைகள் இடிந்து விழுந்ததாக தெரிகிறது என விசாரணை கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
288 அவசர சேவை பணியாளர்களும், 62 தீயணைப்பு குழுக்களும் மற்றும் வான்வழி மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்தில் இருப்பதாக கெம்ரொவா பிராந்திய அவசர உதவித் துறையின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் தீயை அணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். தீப்பற்றிய வணிக வளாகத்தின் கட்டட அமைப்பு சற்று சிக்கலானது என்றும், அதில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள் அதிகம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கிருந்த ஒரு திரையரங்கு அரையில், 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கெம்ரொவோ பகுதியின் துணை ஆளுநர் தெரிவித்தார்.
அவசர சேவை பணியாளர்கள் கட்டடத்திலிருந்து 100 பேரை வெளியேற்றியதாகவும், மேலும் தீயில் சிக்கிய 20 பேரை காப்பாற்ற முடிந்ததாகவும் செய்தி முகமை ஒன்று தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- ஒரே மாதத்தில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும்: ஸ்டாலின்
- முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு
- கணவரின் உயிர் பறித்த 'திருமண பரிசு வெடிகுண்டு': துலங்காத மர்மம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications