இந்தியாவிலேயே பெஸ்ட் கல்விமுறை தமிழ்நாட்டில்தான்.. ரஷ்ய அரசு புகழாரம்.. டிரெண்டாகும் இன்ஸ்டா ரீல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் பள்ளி சான்றிதழை எடுத்துக்காட்டாக காட்டி ரஷ்யாவின் வெளியுறவுத்துறை தங்கள் இணைய பக்கத்தில் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.

ரஷ்யாவிற்கு நீங்கள் மேல் படிப்பு படிக்க செல்கிறீர்கள்.. வேலைக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி செல்லும் பட்சத்தில் அதற்காக நீங்கள் ஆவணங்களை அளிக்க வேண்டும். உங்களின் கல்வி ஆவணங்கள், மற்ற ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும். இதற்கு முதலில் நீங்கள் படித்துள்ள படிப்பு ரஷ்யாவின் கல்வித்தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதாவது அவர்களின் கல்வித்தரத்திற்கு இணையாக இருந்தால்தான் நீங்கள் இங்கே படித்த கல்வியின் சர்டிபிகேட் ஏற்றுக்கொள்ளப்படும்.

இப்படி இருக்க ரஷ்யாவின் இணைய பக்கத்தில் தமிழ்நாட்டின் கல்வி சான்றிதழ் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பள்ளி சான்றிதழை எடுத்துக்காட்டாக காட்டி இது ரஷ்யாவின் கல்வி தரத்திற்கு இணையானது.

Russia gives a certificate to Tamil Nadu Education system in their official website

இது போன்ற சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை தங்கள் இணைய பக்கத்தில் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது. அதாவது நம்முடைய கல்வி சான்றிதழ் போல தரமான கல்வியை கொண்ட மாநிலங்களின் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்ஸ்டாகிராமில் தமிழ் இந்த ரஷ்யா என்ற பக்கத்தில் இந்த போஸ்ட் பகிரப்பட்டு உள்ளது. அங்கே உள்ள தமிழ் தெரிந்த ரஷ்யர் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.


புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில்.. தமிழ்நாடு இதை எதிர்க்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு ரஷ்யாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மும்மொழிக்கொள்கை தொடங்கி எம்பில் படிப்புகள் நீக்கம் வரை முக்கியமான நடைமுறைகள், அறிவிப்புகள் புதிய கல்விக்கொள்கையில் உள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வர நிறைய காரணங்களை சொல்கிறது. அதில் முக்கியமான ஒரு காரணம், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது. 2035க்குள் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை 50% ஆக உயர்த்துவது என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கை சதவிகிதம் எனப்படும் Gross enrollment ratioல் 50% எட்டுவதுதான் மத்திய அரசின் புதிய இலக்காக இருக்கிறது.

ஆனால் இந்த இலக்கை தமிழகம் எப்போதோ அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பேர் கல்லூரி சேர்க்கிறார்கள். பள்ளி படிப்பை முடிப்பவர்களில் மொத்தம் 49% பேர் தமிழகத்தில் கல்லூரியில் சேர்க்கிறார்கள். அதாவது மத்திய அரசு 2035க்கு வைத்த இலக்கை நாம் 2019லேயே தொட்டுவிட்டோம். மற்ற மாநிலங்கள் எல்லாம் இதில் அதள பாதாளத்தில் இருக்கிறது.

மற்ற மாநிலங்களின் நிலை என்று பார்த்தால் கல்வியில் முன்னிலை வகிக்கும் கேரளாவில் ஜிஇஆர் 37% ஆக உள்ளது. அது போக டெல்லியில் அதிகமாக ஜிஇஆர் 46.3% ஆக இருக்கிறது. தெலுங்கானாவில் இது 36.2% ஆக இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இது 32.4% ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஜிஇஆர் சதவிகிதம் 32 ஆக உள்ளது. கர்நாடகாவில் இது வெறும் 28%தான்.

இந்தியாவின் மொத்த ஜிஇஆர் சதவிகிதம் 28%தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை தமிழகம் முந்தியது மட்டுமின்றி பல வல்லரசு நாடுகளையும் தமிழகம் இதில் முந்தி இருக்கிறது. சீனாவின் ஜிஇஆர் சதவிகிதம் 43% ஆனால் தமிழகத்தின் சதவிகிதம் 49. மலேசியாவின் ஜிஇஆர் சதவிகிதம் 45%. பஹ்ரைனின் ஜிஇஆர் சதவிகிதம் 47%. இப்படி வளர்ந்த நாடுகளை விட தமிழகம் முன்னோடியாக உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எல்லா வருடமும் இந்த சதவிகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது . அதாவது தமிழகத்தில் ஜிஇஆர் சதவிகிதம் அதிகரிப்புதான் மற்ற மாநிலங்களில் அதிகரிக்கும் சதவிகிதத்தை கூடுதல் ஆகும். போக தமிழகம் இதில் விரைவில் 50% என்ற இலக்கை தாண்டும் என்று கூறுகிறார்கள் . பிற மாநிலங்கள் இந்த இலக்கை தொட குறைந்தது 10 வருடங்கள் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+