திடீர்னு உயரும் தொற்று பாதிப்பு.. 1000 பேர் ஒரு நாளைக்கு மரணம்.. கதிகலங்கும் ரஷ்யா..!
ரஷ்யாவில் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது
மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் 85 முக்கியமான நகரங்களில் தொற்று விகிதம் 8.8 ஆக அதிகரித்து வருகிறது... இதுவரை 8,851,805 பேர் கொரோனா தொற்று வைரஸுக்கு ஆளாகி உள்ளனர்.. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே ஓரளவு குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது, சில நாடுகளில் மறுபடியும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. அப்படித்தான் ரஷ்யாவும் சிக்கி திணறி வருகிறது.
இப்படி திடீரென கொரோனா வைரஸ் தொற்று உயர்ந்ததற்கு காரணம், ரஷ்ய மக்கள்தான் என்று அந்த நாட்டு அரசு குற்றஞ்சாட்டி வருகிறது..

தடுப்பூசி
தடுப்பூசி போட்டு கொள்ள பலரும் முன்வரவில்லை என்றும், அங்குள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தடுப்பூசிகள் போட்டுள்ளனர், மீதி உள்ளவர்களுக்கு, தடுப்பூசி மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை இல்லை என்கிறார்களாம்... ரஷ்யாவில் தொற்று பாதிப்பு எவ்வளவு இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் சரிந்து விடக்கூடாது என்பதிலும் அந்த அரசு தெளிவாக இருந்து வருகிறது.. எனவேதான் கடுமையான கட்டுப்பாடுகளை இப்போதுவரை கொண்டு வரவில்லை..

சம்பளம்
ஆனால், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை, சம்மதித்து, தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் நிர்ப்பந்தித்து வருகிறது.. அதற்காகத்தான் கடந்த வாரம் ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்தது.. அதன்படி, தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒரு வாரம் சம்பளத்துடன், கூடிய விடுமுறை என அதிரடியாக அதிபர் புடின் அறிவித்தார்.. வரும் அக்டோபர் 30லிருந்து நவம்பர் 7ம் தேதி வரை ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது என்றும், அதனால் ரஷ்ய மக்கள், பொறுப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நகரங்கள்
ஆனாலும் போதிய பலன் இதுவரை கிட்டவில்லை.. காரணம், இப்போதைய நிலவரப்படி, நாட்டின் 85 முக்கியமான நகரங்களில் தொற்று விகிதம் 8.8 ஆக அதிகரித்து வருகிறது... இதுவரை 8,851,805 பேர் கொரோனா தொற்று வைரஸுக்கு ஆளாகி உள்ளனர்.. தலைநகர் மாஸ்கோவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலும் கொரோனா கேஸ்கள் தினமும் 3,000க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தினமும் உயிரிழப்பானது, 1000-ஆக நீடித்து கொண்டிருக்கிறது.. நேற்று மட்டும் 1,072 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலக்கம்
அதேபோல, ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைனிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை அந்நாட்டில் 2,30,600 கேஸ்கள் நடந்து போய் கொண்டுள்ளது.. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்காக ஒருவாரத்துக்கு அதாவது வரும் 30ம் தேதி முதல் 7 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், மக்களுக்கு இப்போதுதான் லேசான கலக்கம் எழுந்துள்ளதாம்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications