நேட்டோவுக்கு செக் வைத்த ரஷ்யா..பெலாரஸில் குவிந்த அணு ஆயுதங்கள்..இது ட்ரைலர் தானாம்
மாஸ்கோ: உக்ரைன் உள்ளிட்ட கிழக்கு நாடுகளை நேட்டோ தன்னுடன் இணைத்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா தனது அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் ரஷ்யாவை எதிர்க்க 1949ம் ஆண்டு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 'நேட்டோ', ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக, ரஷ்யாவின் முன்னாள் நாடான உக்ரைனையே தனது வசம் கொண்டு வந்துவிட்டது. தற்போது வரை சுமார் 31 கிழக்கு நாடுகள் நேட்டோ நேட்டோவுடன் இணைந்திருக்கின்றன. இந்த லிஸ்டில் புதியதாக ஸ்வீடனும் இணைய இருக்கிறது.

இந்நிலையில், தனது எல்லையை பாதுகாக்க உக்ரைனுடன் ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போரின் ஒரு பகுதியாக தனது அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளது. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. தற்போது உக்ரைனுக்கு அமெரிக்காதான் அதிக அளவு ஆயுதங்கள் மற்றும் நிதியை கொடுத்து உசுப்பேற்றி வருகிறது. இப்படி இருக்கையில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ரஷ்யா அணு ஆயுதங்களை குவித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் புதின், "இப்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். ஆனால், ரஷ்யாவின் நிலப்பகுதிக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்ததால் நிச்சயம் இது பயன்படுத்தப்படும்" என்று எச்சரித்திருக்கிறார். ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் நேட்டோவுடன் இணைந்திருந்தாலும், பெலாரஸ் தனியாக நின்று கெத்து காட்டி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பெலாரஸ் ஒரு ஏவுதளமாக செயல்பட்டது. தற்போது பெலாரஸில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் வெறும் முதல் தொகுதிதான் என்று ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை சப்ளை செய்து வந்தால் உக்ரைன் தாக்குதலை மேலும் தீவிரமாக்கும். இது அணு ஆயுத போருக்கு வித்திடலாம் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications