அழிவுக்கு ரஷ்யாவே பொறுப்பு.. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆக்ரோஷம்
மாஸ்கோ: ‛‛உக்ரைனில் ஏற்படும் பலி, அழிவுக்கு ரஷ்யாவே முழு பொறுப்பு'' என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. மேலும் நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்க கூடாது என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவிடமும் ரஷ்யா வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவின் எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பக்கபலமாக உள்ளன. இதனால் கடந்த நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வந்தது. இது ரஷ்யாவின் போர் தொடுக்கும் செயலை குறிப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. மேலும் உக்ரைனில் உள்ள அமெரிக்க மக்கள் உடனே வெளியேற வேண்டும் என ஜோபைடன் கூறினார். மேலும் எல்லையில் குவித்துள்ள படைகளை சீனா வாபஸ் பெற வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்த ரஷ்யா, பயிற்சிக்காகவே படைகள் குவிக்கப்பட்டு வந்ததாக கூறி வந்தது.

ராணுவ நடவடிக்கை துவக்கம்
இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் திடீரென்று உத்தரவிட்டார். இதையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதலை துவங்கி உள்ளன. உக்ரைனின் மிகப்பெரிய நகர்களில் ஒன்றான கார்கியாவில் குண்டுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்பதாக பத்திரிகை தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதின் உரை
உக்ரைன் தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் விலாடிமர் புதின் இன்று தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

விளைவுகளை சந்திக்கலாம்
உக்ரைனில் இருந்து வந்த மிரட்டலுக்கு பதிலளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைனை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரஷ்யாவுக்கு துளியும் கிடையாது. மாறாக அங்குள்ள பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா நாட்டு நடவடிக்கைகளில் தலையிடும் நாடுகளுக்கு இதுவரை இல்லாத விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அழிவுக்கு முழு பொறுப்பு
இதற்கிடையே ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில் ‛ரஷ்ய இராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் மக்களுக்காக ஒட்டுமொத்த உலகமும் பிரார்த்தனை செய்கிறது. இந்த தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்பு, அழிவுக்கு ரஷ்யாவே முழு பொறுப்பு. ரஷ்யாவின் செயலுக்கு அமெரிக்கா தனது நட்பு நாடுகளை ஒன்றிணைத்து தீர்க்கமான வழியில் பதிலளிக்கும். ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்கப்படும். நேட்டோ படைகளுடன் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்'' என்றார். மேலும் ரஷ்யாவின் செயல் தொடர்பாக இன்று காலை ஜி7 உறுப்பு நாடுகளுடனும், அமெரிக்க மக்களுடனும் பேசுவதாக ஜோபைடன் கூறியுள்ளார்.
-
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications